Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1018)
Dasaka 99 - வேத ஸ்துதி
நோ ஜாதோ ஜாயமாநோSபி ச ஸமதிகத: த்வந்மஹிம்நோSவஸாநம் தேவ ச்ரேயாம்ஸி வித்வாந் ப்ரதிமுஹுரபி தே நாம சம்ஸாமி விஷ்ணோ தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நாநாவித நுதி வசநைரஸ்ய லோக த்ரயஸ்யாபி ஊர்த்வம் விப்ரஜாமாநே விரசித வஸதிம் தத்ர வைகுண்ட லோகே நோ ஜாத: ஜாயமாந: அபி ச ஸமதிகத: த்வத் மஹிம்ந: அவஸாநம் தேவ ச்ரேயாம்ஸி வித்வாந் ப்ரதி முஹு: அபி தே நாம சம்ஸாமி விஷ்ணோ தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நாநாவித நுதி வசநை: அஸ்ய லோக த்ரயஸ்ய அபி ஊர்த்வம் விப்ரஜாமாநே விரசித வஸதிம் தத்ர வைகுண்ட லோகே नो जातो जायमानोऽपि च समधिगतस्त्वन्महिम्नोऽवसानं देव श्रेयांसि विद्वान् प्रतिमुहुरपि ते नाम शंसामि विष्णो । तं त्वां संस्तौमि नानाविधनुतिवचनैरस्य लोकत्रयस्या - प्यूर्ध्वं विभ्राजमाने विरचितवसतिं तत्र वैकुण्ठलोके
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விஷ்ணுவே! நாராயணா! உனது மஹிமைகளின் எல்லை என்பதை அறிந்தவர் யாரும் இதுவரை பிறந்ததும் இல்லை, பிறக்கப்போவதும் இல்லை. நன்மைகள் கிடைக்கும் உபாயமான வழியை அறிந்த நான், உனது திருநாமத்தையே மீண்டும் மீண்டும் கூறுகிறேன். உனது ஸ்ரீவைகுண்டலோகமானது, மூன்று லோகங்களை விட மேலானது ஆகும். அங்குள்ள உன்னை நான் பலவாகத் துதிக்கிறேன்.