Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1017)
Dasaka 99 - வேத ஸ்துதி
விஷ்ணோ: கர்மாணி ஸம்பச்யத மநஸி ஸதா யை: ஸ தர்மாநபத்நாத் யாநீந்த்ரஸ்யைஷ ப்ருத்ய: ப்ரியஸக இவ ச வ்யாதநோத் க்ஷேமகாரீ ஈக்ஷந்தே யோகஸித்தா: பரபதமநிசம் யஸ்ய ஸம்யக் ப்ரகாசம் விப்ரேந்த்ரா ஜாகரூகா: க்ருத பஹு நுதயோ யச்ச நிர்பாஸயந்தே விஷ்ணோ: கர்மாணி ஸம்பச்யத மநஸி ஸதா யை: ஸ தர்மாந் அபத்நாத் யாநி இந்த்ரஸ்ய ஏஷ ப்ருத்ய: ப்ரியஸக இவ ச வ்யாதநோத் க்ஷேமகாரீ ஈக்ஷந்தே யோகஸித்தா: பரபதம் அநிசம் யஸ்ய ஸம்யக் ப்ரகாசம் விப்ரேந்த்ரா ஜாகரூகா: க்ருத பஹு நுதய: யத் ச நிர்பாஸயந்தே विष्णोः कर्माणि सम्पश्यत मनसि सदा यैः स धर्मानबध्नाद् - यानीन्द्रस्यैष भृत्यः प्रियसख इव च व्यातनोत् क्षेमकारी । वीक्षन्ते योगसिद्धाः परपदमनिशं यस्य सम्यक् प्रकाशं विप्रेन्द्रा जागरूकाः कृतबहुनुतयो यच्च निर्भासयन्ते
அந்த மஹாவிஷ்ணு பலவகையான செயல்கள் மூலமாக, செய்ய வேண்டிய கடமைகளை, அதனைச் செய்ய வேண்டியவர்களுக்கு வழங்குகிறான். இந்திரனின் பணியாளாகவும், தோழனாகவும் இருந்து உலக நன்மைக்காக பல நற்செயல்கள் செய்தான். யோகம் கைகூடப் பெற்று ஸித்தி பெற்றவர்கள், அவனது பரமபதத்தை எப்போதும் பார்க்கின்றனர். அந்தணர்கள் மிகவும் விழிப்புடன் பலவகையாக ஸ்தோத்ரங்கள் செய்து, அவனை நன்றாக அனைவருக்கும் விளங்கும்படிச் செய்கின்றனர். இப்படிப்பட்ட மஹாவிஷ்ணுவின் லீலைகளை உங்கள் மனதில் எப்போதும் த்யானம் செய்யுங்கள்.