Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1016)
Dasaka 99 - வேத ஸ்துதி
ஹே ஸ்தோதார: கவீந்த்ராஸ்தமிஹ கலு யதா சேதயத்வே ததைவ வ்யக்தம் வேதஸ்ய ஸாரம் ப்ரணுவத ஜநநோபாத்த லீலா கதாபி: ஜாநந்தச்சாஸ்ய நாமாந்யகிலஸுக காரணீதி ஸங்கீர்தயத்வம் ஹே விஷ்ணோ கீர்த்தநாத்யைஸ்தவ கலு மஹதஸ்தத்வபோதம் பஜேயம் ஹே ஸ்தோதார: கவீந்த்ரா: தம் இஹ கலு யதா சேதயத்வே ததா ஏவ வ்யக்தம் வேதஸ்ய ஸாரம் ப்ரணுவத ஜநந உபாத்த லீலா கதாபி: ஜாநந்த: ச அஸ்ய நாமாநி அகில ஸுக காரணி இதி ஸங்கீர்தயத்வம் ஹே விஷ்ணோ கீர்த்தந ஆத்யை: தவ கலு மஹத: தத்வ போதம் பஜேயம் हे स्तोतारः कवीन्द्रास्तमिह खलु यथा चेतयध्वे तथैव व्यक्तं वेदस्य सारं प्रणुवत जननोपात्तलीलाकथाभिः । जानन्तश्चास्य नामान्यखिलसुखकराणीति सङ्कीर्तयध्वं हे विष्णो कीर्तनाद्यैस्तव खलु महतस्तत्त्वबोधं भजेयम्
பகவானைத் துதிக்கும் கவிஞர்களே! வேதங்களால் காட்டப்படும் அந்த மஹாவிஷ்ணுவை நீங்கள் எப்படித் த்யானம் செய்கிறீர்களோ, அப்படியே அவன் உள்ளான். அவனது அவதாரங்கள் மூலம் அவன் செய்த லீலைகளை வர்ணனை செய்து ஸ்தோத்திரம் செய்யுங்கள். ஞானிகளே! அனைவருக்கும் அனைத்துவிதமான இன்பத்தையும் அளிக்கும் அவனது திருநாமங்களைப் பாடுங்கள். குருவாயூரப்பா! மஹாவிஷ்ணுவே! இப்படியாக உனது திருநாமங்களை மட்டுமே பாடி உன்னைப் பற்றிய ஞானத்தை நான் அடைவேனாக.