Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1015)
Dasaka 99 - வேத ஸ்துதி
ஆத்யாயாசேஷ கர்த்ரே ப்ரதிநிமிஷ நவீநாய பர்த்ரே விபூதே: பக்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதிசதி ஹவிராதீநி யஜ்ஞார்ச்சநாதௌ க்ருஷ்ணாத்யம் ஜந்ம யோ வா மஹதிஹ மஹதோ வர்ணயேத்ஸோSயமேவ ப்ரீத: பூர்ணோ யசோபிஸ்த்வரிதம் அபிஸரேத் ப்ராப்யமந்தே பதம் தே ஆத்யாய அசேஷ கர்த்ரே ப்ரதி நிமிஷ நவீநாய பர்த்ரே விபூதே: பக்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதிசதி ஹவி: ஆதீநி யஜ்ஞ அர்ச்சந ஆதௌ க்ருஷ்ணாத்யம் ஜந்ம ய: வா மஹத இஹ மஹத: வர்ணயேத் ஸ: அயம் ஏவ ப்ரீத: பூர்ண: யசோபி: த்வரிதம் அபிஸரேத் ப்ராப்யம் அந்தே பதம் தே आद्यायाशेषकर्त्रे प्रतिनिमिषनवीनाय भर्त्रे विभूते - र्भक्तात्मा विष्णवे यः प्रदिशति हविरादीनि यज्ञार्चनादौ । कृष्णाद्यं जन्म वा महदिह महतो वर्णयेत्सोऽयमेव प्रीतः पूर्णो यशोभिस्त्वरितमभिसरेत् प्राप्यमन्ते पदं ते
குருவாயூரப்பா! எல்லாவற்றுக்கும் முதன்மையாகவும் ஆதியாகவும் உள்ளவனும், அனைத்தையும் படைப்பவனும், தனது பக்தர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் வேறு வேறு விதமாக புதிதாகத் தோன்றுபவனும், மிகுந்த செல்வங்களுக்கு அதிபதியும் ஆகிய மஹாவிஷ்ணுவான உனக்கு - எந்த ஒரு பக்தன் தான் இயற்றும் வேள்வியிலும் பூஜையிலும் அவிர்பாகத்தை பக்தியுடன் அளிக்கின்றானோ, க்ருஷ்ணாவதாரம் போன்ற அவதாரங்களைப் புகழ்ந்து பாடுகின்றானோ, அவன் இந்த உலகில் பெரும் ஆனந்தம் அடைகிறான். அனைவராலும் புகழப்படுகிறான். இப்படியாக வாழ்ந்து, இறுதியில் சென்று அடையவேண்டியதான உனது ஸ்ரீவைகுண்டத்தை அடைகிறான்.