Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1014)

Dasaka 99 - வேத ஸ்துதி

விஷ்ணோர் வீர்யாணி கோ வா கதயது தரணே: கச்ச ரேணூந் மிமீதே யஸ்யைவாங்க்ரி த்ரயேண த்ரி ஜகத் அபிமதம் மோததே பூர்ண ஸம்பத் யோஸௌ விச்வாநி தத்தே ப்ரியமிஹ பரமம் தாம தஸ்யாபியாயாம் த்வத் பக்தா யத்ர மாத்யந்த்யம்ருத ரஸ மரந்தஸ்ய யத்ர ப்ரவாஹ: விஷ்ணோ: வீர்யாணி க: வா கதயது தரணே: க: ச ரேணூந் மிமீதே யஸ்ய ஏவ அங்க்ரி த்ரயேண த்ரி ஜகத் அபிமதம் மோததே பூர்ண ஸம்பத் ய: அஸௌ விச்வாநி தத்தே ப்ரியம் இஹ பரமம் தாம தஸ்ய அபியாயாம் த்வத் பக்தா: யத்ர மாத்யந்தி அம்ருத ரஸ மரந்தஸ்ய யத்ர ப்ரவாஹ: विष्णोर्वीर्याणि को वा कथयतु धरणेः कश्च रेणून्मिमीते यस्यैवाङ्घ्रित्रयेण त्रिजगदभिमितं मोदते पूर्णसम्पत् । योऽसौ विश्वानि धत्ते प्रियमिह परमं धाम तस्याभियायां त्वद्भक्ता यत्र माद्यन्त्यमृतरसमरन्दस्य यत्र प्रवाहः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எந்த ஒரு பகவானின் மூன்று அடிகளால் இந்த மூன்று உலகங்களும் அளக்கப்பட்டதோ, எதன் மூலம் இந்த உலகம் செல்வங்கள் பல அடைந்து மகிழ்வுற்றதோ, எந்த பகவான் உலகம் முழுவதையும் தாங்கி நிற்கின்றானோ, அந்தப் பகவானான மஹாவிஷ்ணுவின் பெருமைகளை யார்தான் பட்டியல் இடமுடியும்? இந்த உலகில் உள்ள மண் துகள்களை எண்ண இயலுமா? மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் ப்ரியமானதும், அனைத்து பக்தர்களும் இன்பம் அடையும் இடமானதும், மோக்ஷம் என்ற மலரின் தேன் பெருக்கெடுத்து ஓடும் இடமானதும் ஆகிய ஸ்ரீவைகுண்டத்தை நான் அடையவேண்டும்.