Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1013)
Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை
துர்வார த்வாதசாரம் த்ரிசத பரிமிலத் ஷஷ்டி பர்வாபிவீதம் ஸம்ப்ராம்யத் க்ரூரவேகம் க்ஷணமநு ஜகதாச்சித்ய ஸந்தாவமாநம் சக்ரம் தே காலரூபம் வ்யதயது ந து மாம் த்வத் பதைகாவலம்பம் விஷ்ணோ காருண்யஸிந்தோ பவந புரபதே பாஹி ஸர்வாமயௌகாத் துர்வார த்வாதச ஆரம் த்ரிசத பரிமிலத் ஷஷ்டி பர்வ அபிவீதம் ஸம்ப்ராம்யத் க்ரூர வேகம் க்ஷணநு ஜகத் ஆச்சித்ய ஸந்தாவமாநம் சக்ரம் தே காலரூபம் வ்யதயது ந து மாம் த்வத் பத ஏக அவலம்பம் விஷ்ணோ காருண்யஸிந்தோ பவந புர பதே பாஹி ஸர்வ ஆமய ஓகாத் दुर्वारं द्वादशारं त्रिशतपरिमिलत्षष्टिपर्वाभिवीतं संभ्राम्यत् क्रूरवेगं क्षणमनु जगदाछिद्य सन्धावमानम् । चक्रं ते कालरूपं व्यथयतु न तु मां त्वत्पदैकावलम्बं विष्णो कारुण्यसिन्धो पवनपुरपते पाहि सर्वामयौघात्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விஷ்ணுவே! கருணைக்கடலே! உனது காலம் என்ற சக்கரமானது பன்னிரண்டு ஆரங்களும் (மாதம்), முந்நூற்று அறுபது முனைகளையும் (நாட்கள்) உடையது ஆகும். அது மிகவும் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. யாராலும் நிறுத்த இயலாத வேகம் உடையது ஆகும். ஒவ்வொரு நொடியும் அது உலகத்தைத் தன்னுடன் வேகமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுகிறது. அப்படி ஓடும் அந்தச் சக்கரம், உனது திருவடிகளை வலுவாகப் பிடித்திருக்கும் என்னைத் துன்புறுத்த வேண்டாம். என்னை எனது பிணிகளில் இருந்து நீ காப்பாற்ற வேண்டும்.***