Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1011)
Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை
த்ரைலோக்யம் பாவயந்தம் த்ரிகுணமயம் இதம் த்ரயக்ஷரஸ்யைக வாச்யம் த்ரீசாநாமைக்யரூபம் த்ரிபிரபி நிகமைர் கீயமாந ஸ்வரூபம் திஸ்ரோவஸ்தா விதந்தம் த்ரியுக ஜநி ஜுஷம் த்ரிக்ரமாக்ராந்த விச்வம் த்ரைகால்யே பேதஹீநம் த்ரிபிரஹம் அநிசம் யோகபேதைர் பஜே த்வாம் த்ரைலோக்யம் பாவயந்தம் த்ரிகுணமயம் இதம் த்ரயக்ஷரஸ்ய ஏக வாச்யம் த்ரி ஈசாநாம் ஐக்யரூபம் த்ரிபி: அபி நிகமை: கீயமாந ஸ்வரூபம் திஸ்ர: அவஸ்தா விதந்தம் த்ரியுக ஜநி ஜுஷம் த்ரி க்ரம ஆக்ராந்த விச்வம் த்ரைகால்யே பேதஹீநம் த்ரிபி: அஹம் அநிசம் யோகபேதை: பஜே த்வாம் त्रैलोक्यं भावयन्तं त्रिगुणमयमिदं त्र्यक्षरस्यैकवाच्यं त्रीशानामैक्यरूपं त्रिभिरपि निगमैर्गीयमानस्वरूपम् । तिस्रोऽवस्था विदन्तं त्रियुगजनिजुषं त्रिक्रमक्रान्तविश्वं त्रैकाल्ये भेदहीनं त्रिभिरहमनिशं योगभेदैर्भजे त्वाम्
குருவாயூரப்பா! நீயே மூன்று குணங்களின் மாறுபாடுகளுடன் கூடிய மூன்று உலகங்களையும் படைக்கிறாய். நீயே “அ, உ, ம” என்ற எழுத்துக்களால் ஆன ப்ரணவத்தின் பொருளாக உள்ளாய். மூன்று மூர்த்திகளின் சேர்க்கையான பொருள் நீயே ஆவாய். மூன்று வேதங்கள் உன்னையே புகழ்ந்து துதிக்கின்றன. மூன்று நிலைகளான விழிப்பு, கனவு, உறக்கம் ஆகியவற்றை அறிந்தவன் நீயே ஆவாய். மூன்று யுகங்களிலும் (த்ரேதா, துவாபர, கலி) நீயே தோன்றுகிறாய். மூன்று அடிகளால், மூன்று உலகையும் நீயே அளந்தாய். மூன்று காலங்களிலும் (கடந்த, நிகழ், எதிர்) நீ மாறாமல் உள்ளாய். இப்படிப்பட்ட உன்னை நான் மூன்று யோகங்களால் (கர்ம, ஞான, பக்தி) வழிபடுகிறேன்.