Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1010)

Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை

யத் பீத்யோதேதி ஸூர்யோ தஹதி ச தஹநோ வாதி வாயுஸ்ததாந்யே யத் பீதா: பத்மஜாத்யா: புநருசித பலீநாஹரந்தேSநுகாலம் யேநைவாரோபிதா: ப்ராங்நிஜபதமபி தே ச்யாவிதாரச்ச பச்சாத் தஸ்மை விச்வம் நியந்த்ரே வயமபி பவதே க்ருஷ்ண குர்ம: ப்ராணாமம் யத் பீத்யா உதேதி ஸூர்ய: தஹதி ச தஹந: வாதி வாயு: ததா அந்யே யத் பீதா: பத்மஜ ஆத்யா: புந: உசித பலீந் ஆஹரந்தே அநுகாலம் யேந ஏவ ஆரோபிதா: ப்ராங் நிஜ பதம் அபி தே ச்யாவிதார: ச பச்சாத் தஸ்மை விச்வம் நியந்த்ரே வயம் அபி பவதே க்ருஷ்ண குர்ம: ப்ராணாமம் यद्भीत्योदेति सूर्यो दहति च दहनो वाति वायुस्तथान्ये यद्भीताः पद्मजाद्याः पुनरुचितबलीनाहरन्तेऽनुकालम् । येनैवारोपिताः प्राङ्निजपदमपि ते च्यावितारश्च पश्चात् तस्मै विश्वं नियन्त्रे वयमपि भवते कृष्ण कुर्मः प्रणामम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னிடம் பயந்து கொண்டு சூரியன் சரியாக உதிக்கிறான்; நெருப்பு எரிக்கின்றது; காற்று வீசுகிறது; நான்முகன் முதலான தேவர்கள் வணக்கம் செய்கின்றனர்; உனக்கு உரிய பலிபாகத்தை அளிக்கின்றனர். தேவர்களை நீ படைப்பின் தொடக்கத்தில் முன்னே நிறுத்துகிறாய். ப்ரளயம் உண்டானபோது கீழே இறக்குகிறாய். அனைத்து உலகங்களையும் ஆட்சி செய்கிறாய். க்ருஷ்ணா! இப்படியான உன்னை நாங்கள் வணங்குகிறோம்.