Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1009)

Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை

பூஷாஸு ஸ்வர்ணவத்வா ஜகதி கட சராவாதிகே ம்ருத்திகாவத் தத்வே ஸஞ்சிந்த்யமாநே ஸ்புரதி தத் அதுநாப்யத்விதீயம் வபுஸ்தே ஸ்வப்ந த்ரஷ்டு: ப்ரபோதே திமிரலய விதௌ ஜீர்ணரஜ்ஜோச்ச யத்வத் வித்யாலாபே ததைவ ஸ்புடமபி விகஸேத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே பூஷாஸு ஸ்வர்ண வத் வா ஜகதி கட சராவ ஆதிகே ம்ருத்திகாவத் தத்வே ஸஞ்சிந்த்யமாநே ஸ்புரதி தத் அதுநா அபி அத்விதீயம் வபு: தே ஸ்வப்ந த்ரஷ்டு: ப்ரபோதே திமிர லய விதௌ ஜீர்ண ரஜ்ஜோ: ச யத் வத் வித்யாலாபே ததா ஏவ ஸ்புடம் அபி விகஸேத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே भूषासु स्वर्णवद्वा जगति घटशरावादिके मृत्तिकावत् तत्त्वे सञ्चिन्त्यमाने स्फुरति तदधुनाप्यद्वितीयं वपुस्ते । स्वप्नद्रष्टुः प्रबोधे तिमिरलयविधौ जीर्णरज्जोश्च यद्वद्विद्यालाभे तथैव स्फुटमपि विकसेत् कृष्ण तस्मै नमस्ते

குருவாயூரப்பா! க்ருஷ்ணா! நன்றாக ஆலோசித்துச் சிந்தித்தால், உனது ஈடு இணையில்லாத ஸ்வரூபமே உலகில் உள்ள அனைத்திற்கும் காரணமாக உள்ளது. இது நகைகளுக்குத் தங்கம் உள்ளது போன்றும், பானை முதலானவற்றுக்கு மண் உள்ளது போன்றும் இருக்கிறது. கனவில் கண்ட பொருள்கள் விழித்துக் கொண்டவுடன் மறைவது போன்று, இருளில் கயிறு பாம்பாகத் தோன்றி வெளிச்சம் வந்தவுடன் எவ்விதம் கயிறாக உள்ளதோ அது போன்று, ஞானம் உண்டான பின்னர் உனது ஸ்வரூபம் தெளிவாகப் புலப்படுகிறது. க்ருஷ்ணா! இப்படிப்பட்ட உனக்கு எனது நமஸ்காரங்கள்.