Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1008)
Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை
ஸத்வேநாஸத்தயா வா ந ச கலு ஸதஸத்வேந நிர்வாச்ய ரூபா தத்தே யாஸாவவித்யா குண பணி மதிவத் விச்வ த்ருச்யாவபாஸம் வித்யாத்வம் ஸைவ யாதா ச்ருதி வசந லவைர் யத் க்ருபா ஸ்யந்த லாபே ஸம்ஸாராரண்ய ஸத்யஸ்த்ருடந பரசுதாமேதி தஸ்மை நமஸ்தே ஸத்வேந அஸத்தயா வா ந ச கலு ஸத் அஸத் வேந நிர்வாச்ய ரூபா தத்தே யா அஸௌ அவித்யா குண பணி மதி வத் விச்வ த்ருச்ய அவபாஸம் வித்யாத்வம் ஸா ஏவ யாதா ச்ருதி வசந லவை: யத் க்ருபா ஸ்யந்த லாபே ஸம்ஸார அரண்ய ஸத்ய: த்ருடந பரசுதாம் ஏதி தஸ்மை நமஸ்தே सत्त्वेनासत्तया वा न च खलु सदसत्त्वेन निर्वाच्यरूपा धत्ते यासावविद्या गुणफणिमतिवद्विश्वदृश्यावभासम् । विद्यात्वं सैव याता श्रुतिवचनलवैर्यत्कृपास्यन्दलाभे संसारारण्यसद्यस्त्रुटनपरशुतामेति तस्मै नमस्ते
குருவாயூரப்பா! அவித்யையானது ஸத் (உள்ளது) என்றோ, அஸத் (இல்லாதது) என்றோ கூறமுடியாதபடி உள்ளதாகும். அத்தகைய மாயை, கயிறானது பாம்பு என்ற எண்ணம் உண்டாக்குவது போன்று, இந்த உலகில் உள்ள பல பொருட்களையும் தோன்ற வைக்கிறது (உண்மை எது, பொய் எது என்று உணரமுடியாத நிலை). ஆனால் உனது அருள் பார்வை கிடைக்கப் பெற்றால், அந்த அவித்யையானது வித்யையாக மாறி விடுகிறது. அப்போது அது ஸம்ஸாரம் என்ற பெரும் காட்டை அழிக்கும் கோடரியாக மாறுகிறது. இப்படிப்பட்ட உனக்கு எனது நமஸ்காரங்கள்.