Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1007)

Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை

சப்த ப்ரஹ்மேதி கர்மேத்யணுரிதி பகவந் கால இத்யாலபந்தி த்வாமேகம் விச்வ ஹேதும் ஸகலமயதயா ஸர்வதா கல்ப்யமாநம் வேதாந்தைர் யத்து கீதம் புருஷ பரசிதாத்மாபிதம் தத்து தத்வம் ப்ரேக்ஷா மாத்ரேண மூல ப்ரக்ருதி விக்ருதி க்ருத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே சப்த ப்ரஹ்ம இதி கர்ம இதி அணு: இதி பகவந் கால இதி ஆலபந்தி த்வாம் ஏகம் விச்வ ஹேதும் ஸகலமயதயா ஸர்வதா கல்ப்யமாநம் வேத அந்தை: யத்து கீதம் புருஷ பர சித் ஆத்மா அபிதம் ததது தத்வம் ப்ரேக்ஷா மாத்ரேண மூல ப்ரக்ருதி விக்ருதி க்ருத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே शब्दब्रह्मेति कर्मेत्यणुरिति भगवन् काल इत्यालपन्ति त्वामेकं विश्वहेतुं सकलमयतया सर्वथा कल्प्यमानम् । वेदान्तैर्यत्तु गीतं पुरुषपरचिदात्माभिधं तत्तु तत्त्वं प्रेक्षामात्रेण मूलप्रकृतिविकृतिकृत् कृष्ण तस्मै नमस्ते

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை உலகிற்கு காரணமான சப்தப்ரஹ்மம் என்றும், கர்மா என்றும், அணு என்றும், காலம் என்றும் கூறுகின்றனர். நீ அனைத்துமாக உள்ளதால் இப்படியாகக் கூறுகின்றனர். வேதங்கள் உன்னைப் புருஷன் என்றும், பரம் என்றும், சித் என்றும், ஆத்மா என்றும் கூறுகின்றன. இப்படிப்பட்ட தத்துவமான நீ, உனது பார்வை மூலமே மாயையை வழி நடத்துகிறாய். இதன் மூலமே மூலப்ரக்ருதியும் அதன் மாற்றங்களும் உண்டாகின்றன. இப்படிப்பட்ட உனக்கு எனது நமஸ்காரங்கள்.