Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1006)

Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை

மாயாயாம் பிம்பிதஸ்த்வம் ஸ்ருஜஸி மஹதஹங்கார தந்மாத்ரபேதை: பூத க்ராமேந்த்ரியாத்யைரபி ஸகல ஜகத் ஸ்வப்ந ஸங்கல்ப கல்பம் பூய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட இவ பதாந்யாத்மநா காலசக்த்யா கம்பீரே ஜாயமாநே தமஸி விதிமிரோ பாஸி தஸ்மை நமஸ்தே மாயாயாம் பிம்பித: த்வம் ஸ்ருஜஸி மஹத் அஹங்கார தந்மாத்ர பேதை: பூத க்ராம இந்த்ரிய ஆத்யை: அபி ஸகல ஜகத் ஸ்வப்ந ஸங்கல்ப கல்பம் பூய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட இவ பதாநி ஆத்மநா காலசக்த்யா கம்பீரே ஜாயமாநே தமஸி விதிமிர: பாஸி தஸ்மை நமஸ்தே मायायां बिम्बितस्त्वं सृजसि महदहङ्कारतन्मात्रभेदै - र्भूतग्रामेन्द्रियाद्यैरपि सकलजगत् स्वप्नसङ्कल्पकल्पम् । भूयः संहृत्य सर्वं कमठ इव पदान्यात्मना कालशक्त्या गम्भीरे जायमाने तमसि वितिमिरो भासि तस्मै नमस्ते

குருவாயூரப்பா! நீ மாயையின் பிம்பமாகத் தோன்றுகிறாய். மஹத், அஹங்காரம், தந்மாத்ரைகள், பஞ்சபூதங்கள், பத்து இந்த்ரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு, கனவிற்கும் நிஜத்திற்கும் ஒப்பான உலகத்தையும், உலகில் உள்ள அனைத்தையும் உருவாக்குகின்றாய். ஆமையானது தனது ஓட்டின் உள்ளே தனது கால்களை இழுத்துக் கொள்வது போன்று, அனைத்து உலகங்களையும் (ப்ரளயத்தின் போது) காலம் என்று சக்தி கொண்டு, உன்னுள் இழுத்துக் கொள்கிறாய். இதனால் எங்கும் ஆழமான இருள் நிறையும்போது, அந்த இருளால் பீடிக்கப்படாமல், தானாகவே ஒளி வீசுகிறாய். அப்படிப்பட்ட உனக்கு எனது நமஸ்காரங்கள்.