Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1005)

Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை

நோ திர்யஞ்சந்ந மர்த்யம் ந ச ஸுரம் அஸுரம் நஸ்த்ரியம் நோ புமாம்ஸம் ந த்ரவ்யம் கர்ம ஜாதிம் குணமபி ஸதஸத்வாபி தே ரூபமாஹு: சிஷ்டம் யத் ஸ்யாந்நிஷேதே ஸதி நிகமசதைர் லக்ஷணா வ்ருத்திதஸ்தத் க்ருச்ரேணாவேத்யமாநம் பரம ஸுகமயம் பாதி தஸ்மை நமஸ்தே நோ திர்யஞ்சம் ந மர்த்யம் ந ச ஸுரம் அஸுரம் ந ஸ்த்ரியம் நோ புமாம்ஸம் ந த்ரவ்யம் கர்ம ஜாதிம் குணம் அபி ஸத் அஸத் வா அபி தே ரூபம் ஆஹு: சிஷ்டம் யத் ஸ்யாத் நிஷேதே ஸதி நிகம சதை: லக்ஷண ஆவ்ருத்தித: தத் க்ருச்ரேண ஆவேத்யமாநம் பரம ஸுகமயம் பாதி தஸ்மை நமஸ்தே नो तिर्यञ्चं न मर्त्यं न च सुरमसुरं न स्त्रियं नो पुमांसं न द्रव्यं कर्म जातिं गुणमपि सदसद्वापि ते रूपमाहुः । शिष्टं यत् स्यान्निषेधे सति निगमशतैर्लक्षणावृत्तितस्तत् कृच्छ्रेणावेद्यमानं परमसुखमयं भाति तस्मै नमस्ते

குருவாயூரப்பா! ஞானிகள் உனது உருவத்தை எப்படி வர்ணிக்கிறார்கள் - உனது உருவம் விலங்கு, பறவை அல்ல; மனிதன் அல்ல; தேவர்கள் அல்ல; அஸுரர்கள் அல்ல; பெண் அல்ல; ஆண் அல்ல; பொருள் அல்ல; செயல் அல்ல; ஜாதி, குணம் அல்ல; உள்ளதாகவும் அல்ல; இல்லாததாகவும் அல்ல. இப்படியாக அனைத்தும் தள்ளப்பட்டவுடன், எஞ்சி நிற்கும் ஒரு பொருள் மட்டுமே உள்ளது. அந்தப் பொருள் பரமானந்தம் அளிப்பதாகவும், ப்ரகாசத்துடன் உள்ளதாகவும் இருக்கிறது. இப்படியாக அல்லவா நூற்றுக்கணக்கான வேத வரிகளின் மூலம் உனது உருவம் புலப்படுகிறது? அத்தகைய உருவம் உடைய உனக்கு எனது நமஸ்காரங்கள்.