Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1004)
Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை
ஜந்மாதோ கர்ம நாம ஸ்புடமிஹ குண தோஷாதிகம் வா ந யஸ்மிந் லோகாநாமூதயே ய: ஸ்வயம் அநுபஜதே தாநி மாயாநுஸாரீ பிப்ரச்சக்தீரரூபோSபி ச பஹுதர ரூபோSவபாத்யத்புதாத்மா தஸ்மை கைவல்ய தாம்நே பர ரஸ பரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தே ஜந்ம அத: கர்ம நாம ஸ்புடம் இஹ குண தோஷ ஆதிகம் வா ந யஸ்மிந் லோகாநாம் ஊதயே ய: ஸ்வயம் அநுபஜதே தாநி மாயா அநுஸாரீ பிப்ரத் சக்தீ: அரூப: அபி ச பஹுதர ரூபா: அவபாதி அத்புத ஆத்மா தஸ்மை கைவல்ய தாம்நே பர ரஸ பரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தே जन्माथो कर्म नाम स्फुटमिह गुणदोषादिकं वा न यस्मिन् लोकानामूतेय यः स्वयमनुभजते तानि मायानुसारी । बिब्रच्छक्तीररूपोऽपि च बहुतररूपोऽवभात्यद्धुतात्मा तस्मै कैवल्यधाम्ने पररसपरिपूर्णाय विष्णो नमस्ते
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனக்குப் பிறப்பு, கர்மம், முக்குணங்கள் (ஸத்வ, ரஜோ, தாமஸ்), குற்றங்கள் (தோஷம்), பெயர் பேதங்கள் ஆகிய எதுவும் கிடையாது. ஆனால் இந்த உலகைக் காக்க எண்ணி, மாயையை அனுசரித்து, அதனால் இவை அனைத்தையும் நீயாகவே ஏற்றுக் கொள்கிறாய் அல்லவா? பல சக்திகளைக் கொண்டு பலவிதமான அவதாரங்களை உடையவனாகப் ப்ரகாசிக்கின்றாய். ஆனால் உண்மையில் உனக்கு உருவம் இல்லை. நீயே மோக்ஷத்தையும், பேரானந்தத்தையும் அளிப்பவன் ஆவாய். இப்படிப்பட்ட விஷ்ணுவே! உனக்கு என் நமஸ்காரங்கள்.