Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1003)

Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை

யஸ்மிந்நேதத் விபாதம் யத இதம் அபவத்யேந சேதம் ய ஏதத் யோSஸ்மாதுத்தீர்ண ரூப: கலு ஸகலமிதம் பாஸிதம் யஸ்ய பாஸா யோ வாசாம் தூரதூரே புநரபி மநஸாம் யஸ்ய தேவா முநீந்த்ரா: நோ வித்யுஸ்தத்வரூபம் கிமு புநரபரே க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே யஸ்மிந் ஏதத் விபாதம் யத: இதம் அபவத் யேந ச இதம் ய ஏதத் ய: அஸ்மாத் உத்தீர்ண ரூப: கலு ஸகலம் இதம் பாஸிதம் யஸ்ய பாஸா ய: வாசாம் தூர தூரே புந: அபி மநஸாம் யஸ்ய தேவா முநீந்த்ரா: நோ வித்யு: தத்வரூபம் கிமு புந: அபரே க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே यस्मिन्नेतद्विभातं यत इदमभवद्येन चेदं य एतद् - योऽस्मादुत्तीर्णरूपः खलु सकलमिदं भासितं यस्य भासा । यो वाचां दूरदूरे पुनरपि मनसां यस्य देवा मुनीन्द्रा नो विद्युस्तत्त्वरूपं किमु पुनरपरे कृष्ण तस्मै नमस्ते

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த உலகம் உன்னிடம் இருந்து தோன்றி விளங்குகின்றது; உன்னாலேயே ப்ரகாசம் பெறுகின்றது; உன்னிடமே சென்று ஒடுங்குகின்றது; நீயே இந்த உலகமாகத் தோன்றுகின்றாய்; உலகில் உள்ள அனைத்தும் நீயாகவே உள்ளாய். உனது ஒளியால் இந்த உலகம் ப்ரகாசம் அடைகின்றது. நீ சொல்லுக்கும் மனதிற்கும் எட்டாத தூரத்தில் உள்ளாய். உனது உண்மையான ஸ்வரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் கூட அறியவில்லை என்னும்போது, மற்றவர்கள் எப்படி அறிய இயலும்? இப்படிப்பட்ட க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனக்கு என் நமஸ்காரங்கள்.