Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 999)
Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்
யாதே த்வய்யசு வாதாகுல ஜலத கலத்தோய பூர்ணாதி கூர்ணத் ஸப்தார்ணோ ராசி மக்நே ஜகதி ஸ து ஜலே ஸம்ப்ரமந் வர்ஷகோடீ: தீந: ப்ரைக்ஷிஷ்ட தூரே வட தள சயநம் கஞ்சிதாச்சர்ய பாலம் த்வாமேவ ச்யாமளாங்கம் வதந ஸரஸிஜ ந்யஸ்த பாதாங்குலீகம் யாதே த்வயி ஆசு வாத ஆகுல ஜலத கலத் தோய பூர்ண அதி கூர்ணத் ஸப்தார்ணோ ராசி மக்நே ஜகதி ஸ து ஜலே ஸம்ப்ரமந் வர்ஷ கோடீ: தீந: ப்ரைக்ஷிஷ்ட தூரே வட தள சயநம் கஞ்சித் ஆச்சர்ய பாலம் த்வாம் ஏவ ச்யாமள அங்கம் வதந ஸரஸிஜ ந்யஸ்த பாத அங்குலீகம் याते त्वय्याशु वाताकुलजलदगलत्तोयपूर्णातिघूर्णत् सप्तार्णोराशि मग्ने जगति स तु जले सम्भ्रमन् वर्षकोटीः । दीनः प्रैक्षिष्ट दूरे वटदलशयनं कञ्चिदाश्चर्यबालं त्वामेव श्यामळाङ्गं वदनसरसिजन्यस्तपादाङ्गुलीकम्
குருவாயூரப்பா! நீ அப்படியே வரம் அளித்துவிட்டு மறைந்தாய். நீ சென்றதும் பலத்த காற்றுடன் சூழ்ந்த மேகங்கள் மழையைக் கொட்டத் தொடங்கின. இதனால் ஏழு கடல்களும் பொங்கி எழுந்து இந்த உலகம் எங்கும் நீர்மயமாக ஆனது. மார்க்கண்டேயன் மட்டும் அந்த நீரில் பல கோடி ஆண்டுகள் தனியாக வருந்தியபடி இருந்தான். அப்போது அவனுக்குக் கிடைத்த காட்சி - நீ ஓர் அற்புதமான சிறு குழந்தையாக ஆலிலை மேல் படுத்துக் கிடந்தாய். நீல நிறமான திருமேனி கொண்டும், தாமரை மலர் போன்ற அழகிய முகத்தில் திருவடிக் கட்டை விரலை வைத்துக் கிடந்தாய். இதனை அவன் கண்டான் அல்லவா?