Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 998)

Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்

ப்ரீத்யா நாராயணாக்யஸ்த்வமத நரஸக: ப்ராப்தவாநஸ்ய பார்ச்வம் துஷ்ட்யா தோஷ்டூயமாந: ஸ து விவிதவரைர் லோபிதோ நாநுமேநே த்ரஷ்டும் மாயாம் த்வதீயம் கில புந: அவ்ருணோத் பக்தி த்ருப்தாந்தராத்மா மாயா து:காநபிஜ்ஞஸ்ததபி ம்ருகயதே நூநமாச்சர்ய ஹேதோ: ப்ரீத்யா நாராயண ஆக்ய: த்வம் அத நரஸக: ப்ராப்தவாந் அஸ்ய பார்ச்வம் துஷ்ட்யா தோஷ்டூயமாந: ஸ து விவிதவரை: லோபித: ந அநுமேநே த்ரஷ்டும் மாயாம் த்வதீயம் கில புந: அவ்ருணோத் பக்தி த்ருப்த அந்தராத்மா மாயா து:க அநபிஜ்ஞ: தத் அபி ம்ருகயதே நூநம் ஆச்சர்ய ஹேதோ: प्रीत्या नारायणाख्यस्त्वमथ नरसखः प्राप्तवानस्य पार्श्वं तुष्ट्या तोष्टूयमानः स तु विविधवरैर्लोभितो नानुमेने । द्रष्टुं मायां त्वदीयां किल पुनरवृणोद्भक्तितृप्तान्तरात्मा मायादुःखानभिज्ञस्तदपि मृगयते नूनमाश्चर्यहेतोः

குருவாயூரப்பா! நீ நரநாராயணனாக அவதரித்தபோது, நீயும் உனது தோழனான நரனும், மார்க்கண்டேயனிடம் சென்றீர்கள். அவன் மிகவும் மகிழ்ந்தவனாய் உன்னைப் பலவாகத் துதித்தான். அப்போது நீ அவனுக்குப் பல வரங்கள் அளிக்கப் போவதாக ஆசை மூட்டினாய். ஆனால் அவன் அவற்றை விரும்பவில்லை. ஆயினும் அவன் உனது மாயை என்றால் என்ன என்று காண விரும்பினான். மாயையால் உண்டாகும் துன்பங்களை அறியாத காரணத்தால், அதனால் உண்டாகும் துன்பத்தை அறியவேண்டியே இப்படிக் கேட்டான் அல்லவா?