Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 997)
Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்
மார்க்கண்டேயச்சிராயு: ஸ கலு புநரபி த்வத்பர: புஷ்பபத்ரா தீரே நிந்யே தபஸ்யந்நதுலஸுக ரதி: ஷட் து மந்வந்தராணி தேவேந்தர: ஸப்தமஸ்தம் ஸுர யுவதி மருந் மந்மதை: மோஹயிஷ்யந் யோகோஷ்ம ப்லுஷ்யமாணைர்ந து புநரசகத் த்வஜ்ஜநம் நிர்ஜயேத் க: மார்க்கண்டேய: சிர ஆயு: ஸ கலு புந: அபி த்வத் பர: புஷ்பபத்ரா தீரே நிந்யே தபஸ்யந் அதுல ஸுக ரதி: ஷட் து மந்வந்தராணி தேவேந்தர: ஸப்தம: தம் ஸுர யுவதி மருத் மந்மதை: மோஹயிஷ்யந் யோக உஷ்ம ப்லுஷ்யமாணை: ந து புந: அசகத் த்வத் ஜநம் நிர்ஜயேத் க: मार्कण्डेयश्चिरायुः स खलु पुनरपि त्वत्परः पुष्पभद्रातीरे निन्ये तपस्यन्नतुलसुखरतिः षट् तु मन्वन्तराणि । देवेन्द्रस्सप्तमस्तं सुरयुवतिमरुन्मन्मथैर्मोहयिष्यन् योगोष्मप्लुष्यमाणैर्न तु पुनरशकत्त्वज्जनं निर्जयेत् कः
குருவாயூரப்பா! அந்த மார்க்கண்டேயன் நீண்ட ஆயுள் பெற்றவனாக, உன்னையே வணங்கி வந்தான். ஈடு இல்லாத ஆனந்தம் அடைய எண்ணியவனாய், புஷ்பபத்ரா என்ற நதிக்கரையில் தவம் செய்து, ஆறு மந்வந்த்ரங்கள் இன்பம் பெற்றான். ஆனால் ஏழாவது மந்வந்த்ரத்தின்போது தேவலோகப் பெண்கள், மன்மதன், தென்றல் காற்று ஆகியவற்றின் உதவியுடன் இந்த்ரன் அவனுடைய தவத்தைக் கலைத்து, மயக்க முயன்றான். ஆனால் அவனது தவத்தின் தீயானது வந்தவர்களை எரித்தது. இப்படியாக உனது பக்தர்களை யாரால் வெல்ல இயலும்?