Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 996)
Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்
தம் சைநம் பக்தியோகம் த்ரடயிதுமயி மே ஸாத்யமாரோக்யமாயு: திஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணம் அஹோ போஷஜாயேவ துக்தம் மார்க்கண்டேயோ ஹி பூர்வம் கணக நிகதித த்வாதசாப்தாயுருச்சை: ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ பட நிவஹைர் த்ராவயாமாஸ ம்ருத்யும் தம் ச ஏநம் பக்தியோகம் த்ரடயிதும் அயி மே ஸாத்யம் ஆரோக்யம் ஆயு: திஷ்ட்யா தத்ர அபி ஸேவ்யம் தவ சரணம் அஹோ போஷஜாய ஏவ துக்தம் மார்க்கண்டேய: ஹி பூர்வம் கணக நிகதித த்வாதச ஆப்த ஆயு: உச்சை: ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ பட நிவஹை: த்ராவயாமாஸ ம்ருத்யும் तं चैनं भक्तियोगं द्रढयितुमयि मे साध्यमारोग्यमायु - र्दिष्ट्या तत्रापि सेव्यं तव चरणमहो भेषजायेव दुग्धम् । मार्कण्डेयो हि पूर्वं गणकनिगदितद्वादशाब्दायुरुच्चैः सेवित्वा वत्सरं त्वां तव भटनिवहैर्द्रावयामास मृत्युम्
குருவாயூரப்பா! உன்னிடம் கொண்ட பக்தியோகம் என்பது திடமாக வளர வேண்டுமானால் எனக்கு உடலில் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் தேவையாக உள்ளது. அதனைப் பெறவும் உனது திருவடியையே நாடவேண்டும் என்பது, பாலே மருந்தாக உள்ளது போன்று வியப்பே ஆகும்! முன்பு ஒரு காலத்தில் மார்க்கண்டேயன் என்பவனுக்கு ஆயுட்காலம் பன்னிரண்டு வருடங்கள் மட்டுமே ஆகும் என்று ஜோதிடர்கள் கணித்தனர். அவன் உன்னை ஓர் ஆண்டு முழுவதும் துதித்தான். அதன் விளைவாக அவன் உனது தூதர்களின் துணை கொண்டு யமனை விரட்டினான் அல்லவா?