Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 995)

Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்

த்வத் பாவோ யாவதேஷு ஸ்புரதி ந விசநம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம் குர்வந்நைகாத்ம்யபோதே ஜடிதி விகஸதி த்வந்மயோSஹம் சரேயம் த்வத் தர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந பகவந் ப்ரஸ்துதஸ்ய ப்ரணாச: தஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிச மம விபோ பக்தி மார்க்கம் மநோஜ்ஞம் த்வத் பாவ: யாவத் ஏஷு ஸ்புரதி ந விசநம் தாவத் ஏவம் ஹி உபாஸ்திம் குர்வந் ஐகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வத் மய: அஹம் சரேயம் த்வத் தர்மஸ்ய அஸ்ய தாவத் கிம் அபி ந பகவந் ப்ரஸ்துதஸ்ய ப்ரணாச: தஸ்மாத் ஸர்வ ஆத்மநா ஏவ ப்ரதிச மம விபோ பக்தி மார்க்கம் மநோஜ்ஞம் त्वद्भावो यावदेषु स्फुरति न विशदं तावदेवं ह्युपास्तिं कुर्वन्नैकात्म्यबोधे झटिति विकसति त्वन्मयोऽहं चरेयम् । त्वद्धर्मस्यास्य तावत् किमपि न भगवन् प्रस्तुतस्य प्रणाश - स्तस्मात्सर्वात्मनैव प्रदिश मम विभो भक्तिमार्गं मनोझम्

குருவாயூரப்பா! பகவானே! “அனைத்து உயிர்களிலும் நீயே உள்ளாய்” என்ற சிந்தனை எனக்கு உண்டாகும்வரை நான் இவ்விதம் உன்னை வணங்கிக் கொண்டிருப்பேன். பின்னர், “எங்கும் உள்ள ஆத்மாக்கள் அனைத்து ஒன்று” என்ற ஞானம் தோன்றியவுடன், “நானே நீ, நீயே நான்”, என்று மாறிவிடுவேன். இப்படியான பாகவத நெறிக்கு அழிவில்லை. எனவே அனைத்து வழிகளிலும் உள்ளம் கவரக்கூடிய பக்தியை நீ எனக்கு அளிப்பாயாக.