Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 994)

Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்

த்வய்யேவ ந்யஸ்தசித்த: ஸுகமயி விசரந் ஸர்வ சேஷ்டாஸ்த்வதர்த்தம் த்வத் பக்தை: ஸேவ்யமாநாநபி சரித சராநாச்ரயந் புண்ய தேசாந் தஸ்யௌ விப்ரே ம்ருகாதிஷ்வபி ச ஸமமதிர் முச்யமாநாவமாந ஸ்பர்த்தாஸூயாதி தோஷ: ஸததம் அகில பூதேஷு ஸம்பூஜயே த்வாம் த்வயி ஏவ ந்யஸ்த சித்த: ஸுகமயி விசரந் ஸர்வ சேஷ்டா: த்வத் அர்த்தம் த்வத் பக்தை: ஸேவ்யமாநாந் அபி சரித சராந் ஆச்ரயந் புண்ய தேசாந் தஸ்யௌ விப்ரே ம்ருகாதிஷு அபி ச ஸம மதி: முச்யமாந அவமாந ஸ்பர்த்தா அஸூயா ஆதி தோஷ: ஸததம் அகில பூதேஷு ஸம்பூஜயே த்வாம் त्वय्येव न्यस्तचित्तः सुखमयि विचरन् सर्वचेष्टास्त्वदर्थं त्वद्भक्तैः सेव्यमानानपि चरितचरानाश्रयन् पुंण्यदेशान् । दस्यौ विप्रे मृगादिष्वपि च सममतिर्मुच्यमानावमान - स्पर्धासूयादिदोषः सततमखिलभूतेषु संपूजये त्वाम्

குருவாயூரப்பா! எனது மனதை உன்னிடம் நான் அர்ப்பணம் செய்யவேண்டும். சுகமாக அனைத்து இடங்களுக்கும் செல்லவேண்டும் (பல கோயில்களுக்கு). உன் பக்தர்கள் இப்போது செல்லும் கோயில்கள், முன்பு சென்ற கோயில்கள் ஆகியவற்றுக்குச் செல்லவேண்டும். மேலும் தீய மனிதர்களிடமும், அந்தணர்களிடமும், விலங்குகளிடமும் சமமான புத்தி கொள்ளவேண்டும். மானம், அவமானம், பொறாமை, த்வேஷம் முதலானவை நீங்கியவனாக மாறவேண்டும். அனைத்து உயிர்களிலும் உன்னையே கண்டு வணங்கவேண்டும்.