Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 993)

Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்

த்ரைகுண்யாத் பிந்ந ரூபம் பவதி ஹி புவநே ஹீந மத்யோத்தமம் யத் ஜ்ஞாநம் ச்ரத்தா ச கர்த்தா வஸதிரபி ச ஸுகம் கர்ம சாஹார பேதா: த்வத் ஷேத்ர த்வந்நிவேஷாதி து யதிஹ புநஸ்த்வத் பரம் தத்து ஸர்வம் ப்ராஹு நைர்குண்ய நிஷ்டம் ததநுபஜநதோ மங்க்ஷு ஸித்தோ பவேயம் த்ரைகுண்யாத் பிந்ந ரூபம் பவதி ஹி புவநே ஹீந மத்யே உத்தமம் யத் ஜ்ஞாநம் ச்ரத்தா ச கர்த்தா வஸதி: அபி ச ஸுகம் கர்ம ச ஆஹார பேதா: த்வத் ஷேத்ர த்வத் நிவேஷ ஆதி து யத் இஹ புந: த்வத் பரம் தத் து ஸர்வம் ப்ராஹு: நைர்குண்ய நிஷ்டம் தத் அநுபஜநத: மங்க்ஷு ஸித்த: பவேயம் त्रैगुण्याद्भिन्नरूपं भवति हि भुवने हीनमध्योत्तमं यतज्ञानं श्रद्धा च कर्ता वसतिरपि सुखं कर्म चाहारभेदाः । त्वत्क्षेत्रत्वन्निषेवादि तु यदिह पुनस्त्वत्परं तत्तु सर्वं प्राहुर्नैर्गुण्यनिष्ठं तदनुभजनतो मङ्क्षु सिद्धो भवेयम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள ஞானம், நம்பிக்கை (ச்ரத்தை), செய்பவன் (கர்த்தா), இருப்பிடம், இன்பம், செயல், உணவு போன்ற பலவும், மூன்று குணங்களால் உண்டாகின்றன. அதனால் அவற்றுள் சில உயர்ந்தவையாகவும், சில தாழ்ந்தவையாகவும், சில நடுத்தரமாகவும் உள்ளன. ஆயினும் உனது கோயிலையும், உன்னையும், உன்னிடம் முழுமையாக அர்ப்பணம் செய்யப்பட்ட மனதுடன் வணங்குவது என்ற செயலானது, இந்த மூன்று குணங்களால் உண்டாக்கப்படாதவை என்று கூறுகின்றனர் (ஆகவே இதற்கு ஏற்றத்தாழ்வு இல்லை). ஆகவே இச்செயல் மூலம் நான் மோக்ஷம் பெறுவேன்.