Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 1002)

Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்

த்ரயம்சேஸ்மிந் ஸத்யலோகே விதி ஹரி புரபிந் மந்த்ராண்யூர்த்வமூர்த்வம் தேப்யோSப்யூர்த்வம் து மாயா விக்ருதி விரஹிதோ பாதி வைகுண்டலோக: தத்ர த்வம் காரணாம்பஸ்யபி பசுபகுலே சுத்த ஸத்வைகரூபீ ஸச்சித் ப்ரஹ்மாத்வயாத்மா பவநபுரபதே பாஹி மாம் ஸர்வரோகாத் த்ரயம்சே அஸ்மிந் ஸத்யலோகே விதி ஹரி புரபிந் மந்த்ராணி ஊர்த்வம் ஊர்த்வம் தேப்ய: அபி ஊர்த்வம் து மாயா விக்ருதி விரஹித: பாதி வைகுண்டலோக: தத்ர த்வம் காரண அம்பஸி அபி பசுபகுலே சுத்த ஸத்வ ஏக ரூபீ ஸத் சித் ப்ரஹ்ம அத்வய ஆத்மா பவநபுர பதே பாஹி மாம் ஸர்வ ரோகாத் त्र्यंशेऽस्मिन् सत्यलोके विधिहरिपुरभिन्मन्दिराण्यूर्ध्वमूर्ध्वं तेभ्योऽप्यूर्ध्वं तु मायाविकृतिविरहितो भाति वैकुण्ठलोकः । तत्र त्वं कारणाम्भस्यपि पशुपकुले शुद्धसत्त्वैकरूपी सच्चिद्ब्रह्माद्वयात्मा पवनपुरपते पाहि मां सर्वरोगात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸத்யலோகம் என்பது ப்ரம்மலோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் ஆகிய மூன்றையும் உடையது ஆகும். அவை ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளன. அவை மூன்றுக்கும் மேலே உள்ளதும், மாயை என்பது தீண்டாமல் உள்ளதும் ஆகிய இடமே உனது ஸ்ரீவைகுண்டம் ஆகும். ஸ்ரீவைகுண்டத்திலும், ப்ரளய கால நீரிலும், க்ருஷ்ணாவதார காலத்தில் கோகுலத்திலுமாக நீ உள்ளாய். ஸச்சிதானந்த ரூபமாகவும், பரப்ரஹ்மமாகவும் உள்ளாய். இப்படியான நீயே எனது பிணிகளை நீக்க வேண்டும்.***