Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 1001)
Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்
கௌர்யா ஸார்த்தம் ததக்ரே புரபிதத கதஸ்த்வத் ப்ரிய ப்ரேக்ஷணார்த்தீ ஸித்தாநேவாஸ்ய தத்வா ஸ்வயமயம் அஜராம்ருத்யுதாதீந் கதோSபூத் ஏவம் த்வத் ஸேவயைவ ஸ்மரரிபு: அபி ஸ ப்ரீயதே யேந தஸ்மாந் மூர்த்தி த்ரய்யாத்மகஸ்த்வம் நநு ஸகல நியந்தேதி ஸுவ்யக்தமாஸீத் கௌர்யா ஸார்த்தம் தத் அக்ரே புரபித் அத கத: த்வத் ப்ரிய ப்ரேக்ஷண அர்த்தீ ஸித்தாந் ஏவ அஸ்ய தத்வா ஸ்வயம் அயம் அஜரா ம்ருத்யுத ஆதீந் கத: அபூத் ஏவம் த்வத் ஸேவயா ஏவ ஸ்மரரிபு: அபி ஸ ப்ரீயதே யேந தஸ்மாத் மூர்த்தி த்ரயி ஆத்மக: த்வம் நநு ஸகல நியந்தா இதி ஸுவ்யக்தம் ஆஸீத் गौर्या सार्धं तदग्रे पुरभिदथ गतस्त्वत्प्रियप्रेक्षणार्थी सिद्धानेवास्य दत्त्वा स्वयमयमजरामृत्युतादीन् गतोऽभूत् । एवं त्वत्सेवयैव स्मररिपुरपि स प्रीयते येन तस्मा - न्मूर्तित्रय्यात्मकस्त्वं ननु सकलनियन्तेति सुव्यक्तमासीत्
குருவாயூரப்பா! அப்போது சிவன் உனது பக்தனைக் காண விரும்பி, பார்வதியுடன் இணைந்து மார்க்கண்டேயன் முன்பாக வந்தார். தனது தவத்தின் மூலமாக மார்க்கண்டேயனுக்கு முதுமையும் மரணமும் இல்லாமல் இருந்தது. ஆயினும் சிவன் அதனை ஒரு வரமாக அளித்துவிட்டுச் சென்றார். இப்படியாக உனது பக்தர்களைக் கண்டு சிவன் பெரிதும் மகிழ்கிறார். இதன் காரணமாகவே, நீ மூன்று மூர்த்திகளின் வடிவம் என்பதையும், நீயே அனைத்தும் என்பதையும் உணரலாம் அல்லவா?