Sriman Narayaneeyam - Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம் (ச்லோகம் 1000)
Dasaka 97 - மார்க்கண்டேய சரிதம்
த்ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்டரோமா த்வரிதம் உபகத: ஸ்ப்ரஷ்டுகாமோ முநீந்த்ர: ச்வாஸேநாந்தர் நிவிஷ்ட: புநரிஹ ஸகலம் த்ருஷ்டவாந் விஷ்டபௌகம் பூயோSபி ச்வாஸ வாதைர் பஹி: அநுபதிதோ வீக்ஷிதஸ்த்வத் கடாக்ஷை: மோதாதாச்லேஷ்டு காமஸ்த்வயி பிஹித தநௌ ஸ்வாச்ரமே ப்ராக்வதாஸீத் த்ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்ட ரோமா த்வரிதம் உபகத: ஸ்ப்ரஷ்டு காம: முநீந்த்ர: ச்வாஸேந அந்த: நிவிஷ்ட: புந: இஹ ஸகலம் த்ருஷ்டவாந் விஷ்டப ஓகம் பூய: அபி ச்வாஸ வாதை: பஹி: அநுபதித: வீக்ஷித: த்வத் கடாக்ஷை: மோதாத் ஆச்லேஷ்டு காம: த்வயி பிஹித தநௌ ஸ்வ ஆச்ரமே ப்ராக் வத் ஆஸீத் दृष्ट्वा त्वां हृष्टरोमा त्वरितमभिगतः स्प्रष्टुकामो मुनीन्द्रः श्वासेनान्तर्निविष्टः पुनरिह सकलं दृष्टवान् विष्टपौघम् । भूयोऽपि श्वासवातैर्बहिरनुपतितो वीक्षितस्त्वत्कटाक्षै - र्मोदादाश्लेष्टुकामस्त्वयि पिहिततनौ स्वाश्रमे प्राग्वदासीत्
குருவாயூரப்பா! இப்படியான உனது தரிசனத்தால் மார்க்கண்டேயன் மெய் சிலிர்த்தான். உனது அழகிய திருமேனியைத் தொட எண்ணியவனாக உன் அருகில் வந்தான். உனது மூச்சுக்காற்று மூலமாக உன்னுள் இழுக்கப்பட்டு உள்ளே சென்று விட்டான். குழந்தையான உனது திருமேனிக்குள் அவன் உலகம் அனைத்தையும் கண்டான். மீண்டும் உனது மூச்சு மூலம் வெளியில் வந்தான். உனது கருணை பொங்கும் பார்வை மூலம் நீ அவனை நோக்கினாய். அவன் மிகவும் மகிழ்ந்து உன்னை ஆரத்தழுவிக் கொள்ள விருப்பம் கொண்டபோது, நீ மறைந்து விட்டாய். அந்த நேரம் தனது ஆச்ரமத்தில் அவன் மீண்டும் இருந்தான்.