Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 992)
Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்
ஜல: ப்ராகுர்வசீம் ப்ரத்யதிவிவசமநா: ஸேவமாநச்சிரம் தாம் காடம் நிர்வித்ய பூயோ யுவதி ஸுகம் இதம் க்ஷுத்ரமேவேதி காயந் த்வத் பக்திம் ப்ராப்ய பூர்ண: ஸுகதரம் அசரத் தத்வதுத்தூய ஸங்கம் பக்தோத்தம்ஸம் க்ரியா மாம் பவந புரபதே ஹந்த மே ருந்தி ரோகாந் ஜல: ப்ராக் உர்வசீம் ப்ரதி அதிவிவசமநா: ஸேவமாந: சிரம் தாம் காடம் நிர்வித்ய பூய: யுவதி ஸுகம் இதம் க்ஷுத்ரம் ஏவ இதி காயந் த்வத் பக்திம் ப்ராப்ய பூர்ண: ஸுகதரம் அசரத் தத் வத் உத்தூய ஸங்கம் பக்த உத்தம்ஸம் க்ரியா மாம் பவந புரபதே ஹந்த மே ருந்தி ரோகாந் ऐल: प्रागुर्वशीं प्रत्यतिविवशमनाः सेवमानश्चिरं तां गाढं निर्विद्य भूयो युवतिसुखमिदं क्षुद्रमेवेति गायन् । त्वद्भक्तिं प्राप्य पूर्णः सुखतरमचरत् तद्वदुद्धूत सङ्गं भक्तोत्तंसं क्रिया मां पवनपुरपते हन्त मे रुन्धि रोगान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முன்பு ஒரு காலகட்டத்தில் ஜலன் என்ற புரூரவஸ் என்னும் மன்னன் வாழ்ந்தான். அவன் ஊர்வசியிடம் தனது மனதைப் பறிகொடுத்தான். அவளுடன் பல காலம் இன்பமாக வாழ்ந்து வந்தான். இறுதியில் பெண்கள் மூலம் கிட்டும் சுகம் அற்பமானது என்று தெளிவுற்றான். அதன் பின்னர் உன்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டான். தனது விருப்பம் நிறைவேறியதால் இன்பம் கொண்டு ஆனந்தமாக வாழ்ந்தான். இப்படியாக எனக்கும் பற்றுகளை விலக்கி, பக்தர்களில் சிறந்தவனாக என்னை மாற்றி, எனது பிணிகளைத் தடுத்துக் காக்கவேண்டும்.***