Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 991)

Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்

கச்சித் க்லேசார்ஜிதார்த்த க்ஷய விமலமதிர் நுத்யமாநோ ஜநௌகை: ப்ராகேவம் ப்ராஹ விப்ரோ ந கலு மம ஜந: கால கர்ம க்ரஹா வா சேதோ மே து:கஹேதுஸ்ததிஹ குணகணம் பாவயத் ஸர்வகாரீதி உக்த்வா சாந்தோ கதஸ்த்வாம் மம ச குரு விபோ தாத்ருசீம் சித்த சாந்திம் கச்சித் க்லேச ஆர்ஜித அர்த்த க்ஷய விமல மதி: நுத்யமாந: ஜந ஓகை: ப்ராக் ஏவம் ப்ராஹ விப்ர: ந கலு மம ஜந: கால கர்ம க்ரஹா வா சேத: மே து:க ஹேது: தத் இஹ குணகணம் பாவயத் ஸர்வகாரீ இதி உக்த்வா சாந்த: கத: த்வாம் மம ச குரு விபோ தாத்ருசீம் சித்த சாந்திம் कश्चित् क्लेशार्जितार्थक्षयविमलमतिर्नुद्यमानो जनौधैः प्रागेवं प्राहि विप्रो न खलु मम जनः कालकर्मग्रहा वा । चेतो मे दुःखहेतुस्तदिह गुणगणं भावयत्सर्वकारीत्युक्त्वा शान्तो गतस्त्वां मम च कुरु विभो तादृशीं चित्तशान्तिम्

குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் ஓர் அந்தணன் பெரிதும் கடினப்பட்டு செல்வங்களைச் சேமித்தான். ஆனால் அவை அழிந்தன. இதனால் அவனுக்கு பற்றற்ற தன்மையும் மனமும் உண்டானது. மக்கள் அவனை “கபட ஸந்யாஸி” என்று துன்பம் செய்தனர். ஆயினும் அவன், “எனது இந்தத் துன்பத்திற்குக் காரணம் இந்த மக்களோ, நேரமோ, எனது கர்மமோ, கிரக நிலையோ அல்ல. எனது மனமே காரணம் ஆகும். ஆத்மாவிடம் குணங்களைப் புகுத்தி இந்த மனமே அனைத்தையும் செய்கிறது”, என்றான். அவன் இப்படியாக அமைதி அடைந்து உன்னை அடைந்தான். எனக்கும் அவன் அடைந்த மன அமைதியை அளிப்பாயாக!