Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 990)

Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்

நிர்விண்ண: கர்மமார்க்கே கலு விஷமதமே த்வத் கதாதௌ ச காடம் ஜாத ச்ரத்தோSபி காமாநயி புவநபதே நைவ சக்நோமி ஹாதும் தத் பூயோ நிச்சயேந த்வயி நிஹிதமநா தோஷ புத்யா பஜம்ஸ்தாந் புஷ்ணீயாம் பக்திமேவ த்வயி ஹ்ருதய கதே மங்க்ஷு நங்க்ஷ்யந்தி ஸங்கா: நிர்விண்ண கர்ம மார்க்கே கலு விஷமதமே த்வத் கதா ஆதௌ ச காடம் ஜாத ச்ரத்த: அபி காமாந் அயி புவநபதே ந ஏவ சக்நோமி ஹாதும் தத் பூய: நிச்சயேந த்வயி நிஹிதமநா தோஷ புத்யா பஜந் தாந் புஷ்ணீயாம் பக்திம் ஏவ த்வயி ஹ்ருதய கதே மங்க்ஷு நங்க்ஷ்யந்தி ஸங்கா: निर्विण्णः कर्ममार्गे खलु विषमतमे त्वत्कथादौ च गाढं जातश्रद्धोऽपि कामानयि भुवनपते नैव शक्नोमि हातुम् । तद्भूयो निश्चयेन त्वयि निहितमना दोषबुद्ध्या भजंस्तान् पुष्णीयां भक्तिमेव त्वयि हृदयगते मङ्क्षु नङ्क्ष्यन्ति सङ्गाः

குருவாயூரப்பா! ஜகத்தின் பதியே! மிகவும் கடுமையான கர்மங்களுடன் கூடிய வழியை நான் வெறுத்துள்ளேன். உனது சரிதங்கள் மீது உறுதியான பக்தியைக் கொண்டுள்ளேன். இருப்பினும் ஆசைகளை அடியோடு தொலைப்பதற்கு உரிய ஆற்றல் என்னிடம் இல்லை. அதனால் மீண்டும் மீண்டும் உன்னிடம் எனது மனதை நிலைநிறுத்தி, அந்த ஆசைகளைக் குற்றம் எதுவும் இல்லாமல் அனுபவித்து, பக்தியை மேலும் வளர்ப்பேன். இதன் மூலம் நீ எனது இதயத்தில் வந்த பின்னர், அந்த ஆசைகளுக்கும், பற்றுகளுக்கும் இடம் இல்லாமல் நாசமாகப் போகின்றன அல்லவா?