Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 989)

Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்

ஜ்ஞாநாயைவாதியத்நம் முநிரபவததே ப்ரஹ்ம தத்வம் து ச்ருண்வந் காடம் த்வத் பாத பக்திம் சரணமயதி யஸ்தஸ்ய முக்தி: கராக்ரே த்வத் த்யாநேSபீஹ துல்யா புந: அஸுகரதா சித்த சாஞ்சல்யஹேதோ: அப்யாஸாதாசு சக்யம் ததபி வசயிதும் த்வத் க்ருபா சாருதாப்யாம் ஜ்ஞாநாய ஏவ அதி யத்நம் முநி: அபவததே ப்ரஹ்ம தத்வம் து ச்ருண்வந் காடம் த்வத் பாத பக்திம் சரணம் அயதி ய: தஸ்ய முக்தி: கராக்ரே த்வத் த்யாநே அபி இஹ துல்யா புந: அஸுகரதா சித்த சாஞ்சல்ய ஹேதோ: அப்யாஸாத் ஆசு சக்யம் தத் அபி வசயிதும் த்வத் க்ருபா சாருதாப்யாம் ज्ञानायैवातियत्नं मुनिरपवदते ब्रह्मतत्त्वं तु श्रुण्वन् गाढं त्वत्पादभक्तिं शरणमयति यस्तस्य मुक्तिः कराग्रे । त्वद्ध्यानेऽपीह तुल्या पुनरसुकरता चित्तचाञ्चल्यहेतो - रभ्यासादाशु शक्यं वशयितुं त्वत्कृपाचारुताभ्याम्

குருவாயூரப்பா! ஞானம் அடைவதற்காக மட்டுமே செய்யும் முயற்சிகளை வ்யாஸர் பலமாகக் கண்டிக்கிறார். யார் ஒருவன் ப்ரஹ்மத்தினைப் பற்றிக் கேட்டு அறிந்தவனாக, உனது திருவடிகளில் உறுதியான பக்தியுடன் சரணம் என்று புகுந்தவனாக உள்ளானோ, அவனுக்கு மோக்ஷமானது கைகளில் எட்டும் தூரத்தில் உள்ளது. பக்தியோகத்திலும் மனம் எளிதில் கட்டுப்பாட்டில் வராமல் அலைவதால், இதுவும் ஞானயோகம் போன்று சற்று கடினமானது ஆகும். ஆயினும் பயிற்சியின் மூலமாகவும், உனது கருணையாலும், உனது திருமேனியின் அழகாலும் மனதை அடக்க இயலும்.