Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 988)

Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்

அவ்யக்தம் மார்க்கயந்த: ச்ருதிபிரபி நயை: கேவல ஜ்ஞாந லுப்தா: க்லிச்யந்தேSதீவ ஸித்திம் பஹுதர ஜநுஷாமந்த ஏவாப்நுவந்தி தூரஸ்த: கர்மயோகோSபி ச பரமபலே நந்வயம் பக்தியோக: த்வாமூலாதேவ ஹ்ருத்யஸ்த்வரிதமயி பகவத் ப்ராபகோ வர்த்ததாம் மே அவ்யக்தம் மார்க்கயந்த: ச்ருதிபி: அபி நயை: கேவல ஜ்ஞாந லுப்தா: க்லிச்யந்தே அதீவ ஸித்திம் பஹுதர ஜநுஷாம் அந்த ஏவ ஆப்நுவந்தி தூரஸ்த: கர்மயோக: அபி ச பரமபலே நநு அயம் பக்தியோக: து ஆமூலாத் ஏவ ஹ்ருத்ய: த்வரிதம் அயி பகவத் ப்ராபக: வர்த்ததாம் மே अव्यक्तं मार्गयन्तः श्रुतिभिरपि नयैः केवलज्ञानलुब्धाः क्लिश्यन्तेऽतीव सिद्धिं बहुतरजनुषामन्त एवाप्नुवन्ति । दूरस्थः कर्मयोगोऽपि च परमफले नन्वयं भक्तियोग - स्त्वामूलादेव हृद्यस्त्वरितमयि भवत्प्रापको वर्धतां मे

குருவாயூரப்பா! ஞானத்தை மட்டுமே பெற விரும்புகின்ற மனிதர்கள் உபநிஷத்துக்களிலும், சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ள, புலன்களால் அறிய இயலாத ப்ரஹ்மத்தை ஆராய்ந்து கஷ்டப்படுகின்றனர். அவர்கள் பல பிறவிகள் எடுத்து இறுதியாகவே மோக்ஷம் பெறுகின்றனர். கர்மயோகம் கூட மோக்ஷத்திற்கு வெகு தூரமாகவே உள்ளது. ஆனால் பக்தியோகம் மட்டுமே தொடக்கத்தில் இருந்தே மனதிற்கு இன்பமாகவும், உன்னை எளிதில் அடையச்செய்வதாகவும் உள்ளது. அத்தகைய பக்தியோகம் எனக்கு வளரவேண்டும்.