Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 987)

Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்

ஜ்ஞாநம் த்வத்பக்ததாம் வா லகு ஸுக்ருத வசாந் மர்த்ய லோகே லபந்தே தஸ்மாத் தத்ரைவ ஜந்ம ஸ்ப்ருஹயதி பகவந் நாககோ நாரகோ வா ஆவிஷ்டம் மாம் து தைவாத் பவ ஜல நிதி போதாயிதே மர்த்யதேஹே த்வம் க்ருத்வா கர்ணதாரம் குருமநுகுண வாதாயிதஸ்தாரயேதா: ஜ்ஞாநம் த்வத் பக்ததாம் வா லகு ஸுக்ருத வசாந் மர்த்ய லோகே லபந்தே தஸ்மாத் தத்ர ஏவ ஜந்ம ஸ்ப்ருஹயதி பகவந் நாகக: நாரக: வா ஆவிஷ்டம் மாம் து தைவாத் பவ ஜல நிதி போதாயிதே மர்த்ய தேஹே த்வம் க்ருத்வா கர்ணதாரம் குரும் அநுகுண வாதாயித: தாரயேதா: ज्ञानं त्वद्भक्ततां वा लघु सुकृतवशान्मर्त्यलोके लभन्ते तस्मात्तत्रैव जन्म स्पृहयति भगवन् नाकगो नारको वा । आविष्टं मां तु दैवाद्भवजलनिधिपोतायिते मर्त्यदेहे त्वं कृत्वा कर्णधारं गुरुमनुगुणवातायितस्तारयेथाः

குருவாயூரப்பா! பகவானே! மனிதர்கள் தங்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தில் பலனாக, ஞானத்தையோ பக்தியையோ மிகவும் எளிதாகப் பெற்று விடுகின்றனர். இதனால்தான் ஸ்வர்க்கம் சென்றவனும், நரகம் புகுந்தவனும் மீண்டும் இந்த உலகில் மனிதனாகப் பிறக்க விரும்புகிறான். ஸம்ஸாரம் என்னும் இந்த மனித வாழ்க்கையான பெரும் கடலைக் கடக்க உதவும் ஓடமாக இந்தச் சரீரம் உள்ளது. அதில் உனது கருணையால் ஓடத்தைச் செலுத்துபவனாக ஒரு குரு அமைகிறார். நீ காற்றாக மாறி, ஓடமாகிய என்னை, கரையில் சேர்ப்பாயாக (அந்தக் குருவும் நீயாகவே இருத்தல் வேண்டும் என்று கேட்பதாகவும் கொள்ளலாம்).