Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 986)
Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்
ஜ்ஞாநம் கர்மபி பக்திஸ்த்ரிதயமிஹ பவத் ப்ராபகம் தத்ர தாவந் நிர்விண்ணாநாமசேஷே விஷய இஹ பவேத் ஜ்ஞாந யோகேSதிகார: ஸக்தாநாம் கர்மயோகஸ்த்வயி ஹி விநிஹிதோ யே து நாத்யந்த ஸக்தா: நாப்யத்யந்தம் விரக்தாஸ்த்வயி ச த்ருத ரஸா பக்தியோகோ ஹ்யமீஷாம் ஜ்ஞாநம் கர்ம அபி பக்தி: த்ரிதயம் இஹ பவத் ப்ராபகம் தத்ர தாவந் நிர்விண்ணாநாம் அசேஷே விஷய இஹ பவேத் ஜ்ஞாந யோகே அதிகார: ஸக்தாநாம் கர்ம யோக: த்வயி ஹி விநிஹித: யே து ந அத்யந்த ஸக்தா: ந அபி அத்யந்தம் விரக்தா: த்வயி ச த்ருத ரஸா: பக்தி யோக: ஹி அமீஷாம் ज्ञानं कर्मापि भक्तिस्त्रितयमिह भवत्प्रापकं तत्र ताव - न्निर्विण्णानामशेषे विषय इह भवेत् ज्ञानयोगेऽधिकारः । सक्तानां कर्मयोगस्त्वयि हि विनिहितो ये तु नात्यन्तसक्ता नाप्यत्यन्तं विरक्तास्त्वयि च धृतरसा भक्तियोगो ह्यमीषाम्
குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள மனிதர்களுக்கு ஞானம், கர்மம், பக்தி ஆகிய மூன்றும் உன்னை அடையச் செய்யும் வழிகள் ஆகும். இந்த உலகில் உள்ள சிற்றின்பங்களைத் துறந்து அவற்றில் வெறுப்பு உடையவர்களுக்கு மட்டும் ஞானயோகம் ஏற்புடையது ஆகும். பற்று நீங்காமல் உள்ளவர்களுக்கு உன்னை அடைய கர்மயோகமே சிறந்தது ஆகும். சிற்றின்பங்களில் பற்றும், பற்று இல்லாத நிலையும் கொண்டு, உன்னிடம் அன்பு மாத்திரமே உள்ளவர்களுக்கு பக்தியோகமே சிறப்பானது.