Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 985)
Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்
தர்மம் வர்ணாச்ரமாணாம் ச்ருதி பத விஹிதம் த்வத் பரத்வேந பக்த்யா குர்வந்தோSந்தர் விராகே விகஸதி சநகை: ஸந்த்யஜந்தோ லபந்தே ஸத்தா ஸ்பூர்த்தி ப்ரியத்வாத்மகமகில பதார்த்தேஷு பிந்நேஷ்வபிந்நம் நிர்மூலம் விச்வமூலம் பரமமஹமிதி த்வத் விபோதம் விசுத்தம் தர்மம் வர்ண ஆச்ரமாணாம் ச்ருதி பத விஹிதம் த்வத் பரத்வேந பக்த்யா குர்வந்த: அந்த: விராகே விகஸதி சநகை: ஸந்த்யஜந்த: லபந்தே ஸத்தா ஸ்பூர்த்தி ப்ரியத்வ ஆத்மகம் அகில பதார்த்தேஷு பிந்நேஷு அபிந்நம் நிர்மூலம் விச்வமூலம் பரமம் அஹம் இதி த்வத் விபோதம் விசுத்தம் धर्मं वर्णाश्रमाणां श्रुतिपथविहितं त्वत्परत्वेन भक्त्या कुर्वन्तोऽन्तर्विरागे विकसति शनकैस्सन्त्यजन्तो लभन्ते । सत्तास्फूर्तिप्रियत्वात्मकमखिलपदार्थेषु भिन्नेष्वभिन्नं निर्मूलं विश्वमूलं परममहमिति त्वद्विबोधं विशुद्धम्
குருவாயூரப்பா! நான்கு வகையான வர்ணாச்ரமங்களுக்கு உரிய நெறிகளை வேதங்கள் கூறுகின்றன. அவற்றை உனது பக்தர்கள் உன்னிடம் ஆழ்ந்த பக்தியுடன் உனக்கே அர்ப்பணம் செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு பற்றற்ற நிலை ஏற்படும்போது, அந்தக் கர்மங்களை படிப்படியாகத் துறந்து, பரம்பொருளான உன்னை நெருங்குகின்றனர். அப்படிப்பட்ட பரம்பொருளான நீ, ஸச்சிதானந்த ரூபமாக உள்ளாய். பலவாகத் தோன்றும் பொருள்களில் நீ பலவாக இருப்பதில்லை (ஒன்றாகவே உள்ளாய்). உனக்கு எந்த ஒரு காரணப்பொருளும் (ஒரு பொருளை உண்டாக்கும் பொருளே காரணப் பொருள் எனப்படும்) இல்லை. நீயே அனைத்துப் பொருள்களுக்கும் காரணமாக உள்ளாய். இப்படியாக உள்ள உனது ஸ்வரூபத்தை “நானே பரம்பொருள்” என்று அந்த பக்தர்கள் உனது ஸ்வரூபத்தையே அடைகின்றனர்.