Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 984)
Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்
ப்ரஹ்மண்யாநாம் பலிஸ்த்வம் க்ரதுஷு ச ஜப யஜ்ஞோSஸி வீரேஷு பார்த்தோ பக்தாநாமுத்தவஸ்த்வம் பலமஸி பலிநாம் தாம தேஜஸ்விநாம் த்வம் நாஸ்த்யந்தஸ்த்வத் விபூதேர் விகஸத் அதிசயம் வஸ்து ஸர்வம் த்வமேவ த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதாநம் யதிஹ பவத் ருதே தந்ந கிஞ்சித் ப்ரபஞ்சே ப்ரஹ்மண்யாநாம் பலி: த்வம் க்ரதுஷு ச ஜப யஜ்ஞ: அஸி வீரேஷு பார்த்த: பக்தாநாம் உத்தவ: த்வம் பலம் அஸி பலிநாம் தாம தேஜஸ்விநாம் த்வம் ந அஸ்தி அந்த: த்வத் விபூதே: விகஸத் அதிசயம் வஸ்து ஸர்வம் த்வம் ஏவ த்வம் ஜீவ: த்வம் ப்ரதாநம் யத் இஹ பவத் ருதே தத் ந கிஞ்சித் ப்ரபஞ்சே ब्रह्मण्यानां बलिस्त्वं क्रतुषु च जपयज्ञोऽसो वीरेषु पार्थो भक्तानामुद्धवस्त्वं बलमसि बलिनां धाम तेजस्विनां त्वम् । नास्त्यन्तस्त्वद्विभूतेर्विकसदतिशयं वस्तु सर्वं त्वमेव त्वं जीवस्त्वं प्रधानं यदिह भवदृते तन्न किञ्चित् प्रपञ्चे
குருவாயூரப்பா! அந்தணர்களை வணங்குபவர்களில் நீ மஹாபலி; யாகங்களில் நீ ஜபவேள்வி; வீரர்களில் நீ அர்ஜுனன்; பக்தர்களில் நீ உத்தவர் என உள்ளாய். நீயே பலம் உடையவர்களுக்கு அவர்கள் பலமாகவும், தேஜஸ் உடையவர்களுக்கு அவர்கள் தேஜஸ்ஸாகவும் உள்ளாய். இப்படியான உனது பெருமைக்கு ஓர் எல்லை என்பதே கிடையாது. இந்த உலகில் விலை மதிப்புள்ள சிறந்த பொருள்கள் அனைத்தும் நீயே ஆவாய். ஜீவனும் நீயே, ப்ரக்ருதியும் (சரீரம்) நீயே ஆவாய். இந்த உலகில் நீ இல்லாத பொருள் என்று எதுவும் கிடையாது.