Sriman Narayaneeyam - Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம் (ச்லோகம் 983)

Dasaka 96 - ஞான, கர்ம, பக்தி யோகம்

த்வம் ஹி ப்ரஹ்மைவ ஸாக்ஷாத் பரமுரு மஹிமந்நக்ஷராணாமகார: தாரோ மந்த்ரேஷு ராஜ்ஞாம் மநுரஸி முநிஷு த்வம் ப்ருகுர் நாரதோSபி ப்ரஹ்லாதோ தாநவாநாம் பசுஷு ச ஸுரபி: பக்ஷிணாம் வைநதேயோ நாகாநாமஸ்யநந்தஸ்ஸுரஸரிதபி ச ஸ்ரோதஸாம் விச்வமூர்த்தே த்வம் ஹி ப்ரஹ்ம ஏவ ஸாக்ஷாத் பரம் உரு மஹிமந் அக்ஷராணாம் அகார: தார: மந்த்ரேஷு ராஜ்ஞாம் மநு: அஸி முநிஷு த்வம் ப்ருகு: நாரத: அபி ப்ரஹ்லாத: தாநவாநாம் பசுஷு ச ஸுரபி: பக்ஷிணாம் வைநதேய: நாகாநாம் அஸி அநந்த: ஸுரஸரித் அபி ச ஸ்ரோதஸாம் விச்வமூர்த்தே त्वं हि ब्रह्मैव साक्षात् परमुरुमहिमन्नक्षराणामकार - स्तारो मन्त्रेषु राज्ञां मनुरसि मुनिषु त्वं भृगुर्नारदोऽपि । प्रह्लादो दानवानां पशुषु च सुरभिः पक्षिणां वैनतेयो नागानामस्यनन्तः सुरसरिदपि च स्रोतसां विश्वमूर्ते

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விச்வமூர்த்தியே! நீயே பரப்ரஹ்மம் ஆவாய். எழுத்துக்களில் நீயே “அ” என்னும் முதல் எழுத்து; மந்திரங்களுள் நீயே ஓம்காரம்; அரசர்களில் நீயே மனு: முனிவர்களில் நீயே ப்ருகு மற்றும் நாரதன்; அஸுரர்களில் நீயே ப்ரஹ்லாதன்; பசுக்களில் நீயே காமதேனு; பறவைகளில் நீயே கருடன்; பாம்புகளில் நீயே ஆதிசேஷன்; நதிகளில் நீயே கங்கை ஆவாய் - இப்படியாக அல்லவா உள்ளாய்.