Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 982)

Dasaka 95 - தியான யோகம்

இத்தம் த்வத் த்யாந யோகே ஸதி புநரணிமா ஆத்யஷ்ட ஸம்ஸித்தயஸ்தா: தூர ச்ருத்யாதயோSபி ஹ்யஹமஹமிகயா ஸம்பதேயுர் முராரே த்வத் ஸம்ப்ராப்தௌ விலம்பாவாஹம் அகிலமிதம் நாத்ரியே காமயேSஹம் த்வாமேவாநந்த பூர்ணம் பவநபுரபதே பாஹி மாம் ஸர்வதாபாத் இத்தம் த்வத் த்யாந யோகே ஸதி புந: அணிமா ஆதி அஷ்ட ஸம்ஸித்தய: தா: தூர ச்ருதி ஆதய: அபி ஹி அஹம் அஹமிகயா ஸம்பதேயு: முராரே த்வத் ஸம்ப்ராப்தௌ விலம்ப ஆவாஹம் அகிலம் இதம் ந ஆத்ரியே காமயே அஹம் த்வாம் ஏவ ஆநந்தபூர்ணம் பவநபுரபதே பாஹி மாம் ஸர்வ தாபாத் इत्थं त्वद्ध्यानयोगे सति पुनरणिमाद्यष्टसंसिद्धयस्ता दूरश्रुत्यादयोऽपि ह्यहमहमिकया सम्पतेयुर्मुरारे । त्वत्सम्प्राप्तौ विलम्बावहमखिलमिदं नाद्रिये कामयेऽहं त्वामेवानन्दपूर्णं पवनपुरपते पाहि मां सर्वतापात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முரன் என்ற அசுரனை அழித்தவனே! இப்படியாக த்யானத்தில் ஈடுபட்ட என்னிடத்தில் அணிமா முதலான அஷ்டமா ஸித்திகளும், தூரத்தில் பேசுவதைக் கேட்கும் திறன், தூரத்தில் உள்ளவற்றைப் பார்க்கும் திறன் ஆகிய ஸித்திகளும், “நான் முந்தி, நீ முந்தி”, என்று ஓடி வரும், ஆனால் இவை அனைத்தும் உன்னை அடைவதைத் தடுக்கும் என்பதால் நான் அவற்றை விரும்பமாட்டேன். ஆனந்தமே உருவமாக உள்ள உன்னை மட்டும் விரும்பி நிற்பேன். குருவாயூரின் பதியே! எனது துயர்களை நீயே களைந்து என்னைக் காக்கவேண்டும்.***