Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 981)
Dasaka 95 - தியான யோகம்
ஸர்வாங்கேஷ்வங்க ரங்கத் குதுகம் இதி முஹுர் தாரயந்நீச சித்தம் தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வதந ஸரஸிஜே ஸுந்தரே மந்தஹாஸே தத்ராலீநம் தம் து சேத: பரம ஸுக சிதத்வைத ரூபே விதந்வந் அந்யந்நோ சிந்தயேயம் முஹுரிதி ஸமுபாரூடயோகோ பவேயம் ஸர்வ அங்கேஷு அங்க ரங்கத் குதுகம் இதி முஹு: தாரயந் ஈச சித்தம் தத்ர அபி ஏகத்ர யுஞ்ஜே வதந ஸரஸிஜே ஸுந்தரே மந்த ஹாஸே தத்ர ஆலீநம் தம் து சேத: பரம ஸுக சித் அத்வைத ரூபே: விதந்வந் அந்யத் நோ சிந்தயேயம் முஹு: இதி ஸமுபாரூட யோகோ பவேயம் सर्वाङ्गेष्वङ्ग रङ्गत्कुतुकमति मुहुर्धारयन्नीश चित्तं तत्राप्येकत्र युञ्जे वदनसरसिजे सुन्दरे मन्दहासे । तत्रालीनन्तु चेतः परमसुखचिदद्वैतरूपे वितन्व - न्नन्यन्नो चिन्तयेयं मुहुरिति समुपारूढयोगो भवेयम्
குருவாயூரப்பா! உனது த்யானத்தின் மீது மிகவும் விருப்பம் உடைய என் மனதை, உனது ஒவ்வோரு உறுப்பின் மீதும் நிலை நிறுத்துவேன். அத்தகைய உறுப்புகளில் மிகவும் அழகானதும், புன்னகையுடன் கூடியதான தாமரை போன்ற திருமுகத்தின் மீது சிந்தனையை ஒன்றி நிறுத்துவேன். அப்படி நிலை நிறுத்திய மனதை, ஸச்சிதானந்த வடிவமானதும், ஈடு எதுவும் இல்லாததும் ஆகிய ப்ரஹ்மமாகிய உன் மீது செலுத்தி வேறு எதையும் நினைக்காமல் இருப்பேன். இப்படியாக நான் த்யானத்தில் மேன்மேலும் உயர்வேன்.