Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 980)

Dasaka 95 - தியான யோகம்

ஆநீல ச்லக்ஷ்ண கேசம் ஜ்வலித மகர ஸத்குண்டலம் மந்த ஹாஸ ஸ்யந்தார்த்ரம் கௌஸ்துப ஸ்ரீபரிகத வநமாலோரு ஹாராபிராமம் ஸ்ரீவத்ஸாங்கம் ஸுபாஹும் ம்ருது லஸதுதரம் காஞ்சநச்சாய சேலம் சாரு ஸ்நிக்தோருமம்போருஹு லலித பதம் பாவயேSஹம் பவந்தம் ஆநீல ச்லக்ஷ்ண கேசம் ஜ்வலித மகர ஸத்குண்டலம் மந்த ஹாஸ ஸ்யந்த ஆர்த்ரம் கௌஸ்துப ஸ்ரீ பரிகத வநமாலா உரு ஹார அபிராமம் ஸ்ரீவத்ஸ அங்கம் ஸுபாஹும் ம்ருது லஸத் உதரம் காஞ்சந ச்சாய சேலம் சாரு ஸ்நிக்த ஊரும் அம்போருஹு லலித பதம் பாவயே அஹம் பவந்தம் आनीलश्लक्ष्णकेशं ज्वलितमकरसत्कुण्डलं मन्दहास - स्यन्दार्द्रं कौस्तुभश्रीपरिगतवनमालोरुहाराभिरामम् । श्रीवत्साङ्कं सुबाहुं मृदुलसदुदरं काञ्चनच्छायचेलं चारुस्निग्धोरुमम्भोरुहललितपदं भावयेऽहं भवन्तम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒளி வீசும் கறுத்த தலைமுடி; காதில் ஒளி வீசும் அழகிய மகர குண்டலங்கள்; அழகிய உதடுகளில் கனிவான புன்னகை: கௌஸ்துபம் என்ற நீலமணியால் மேலும் ஒளி வீசும் வைஜயந்தி என்ற மாலை; பெரிய முத்து மாலைகள்; ஸ்ரீவத்ஸம் என்ற அழகிய மச்சம்; நீண்டு விளங்கும் அழகிய திருக்கரங்கள்; மெலிதான ம்ருதுவான வயிறு: தங்கம் போன்ற பட்டு ஆடை: உருண்டு திரண்ட அழகிய கால்தொடைகள்; தாமரை போன்று சிவந்தும் அழகாகவும் மலர்ந்தும் உள்ள திருப்பாதங்கள்; இப்படிப்பட்ட உனது திருஉருவத்தை நான் என்றும் த்யானிப்பேன்.