Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 979)

Dasaka 95 - தியான யோகம்

த்யாநம் தே சீலயேயம் ஸம தநு ஸுக பத்தாஸநோ நாஸிகாக்ர ந்யஸ்தாக்ஷ: பூரகாத்யைர் ஜித பவந பதச்சித்த பத்மம் த்வவாஞ்சம் ஊர்த்வாக்ரம் பாவயித்வா ரவி விது சிகிந: ஸம்விசிந்த்யோபரிஷ்டாத் தத்ரஸ்தம் பாவயே த்வாம் ஸஜல ஜலதர ச்யாமளம் கோமளாங்கம் த்யாநம் தே சீலயேயம் ஸம தநு ஸுக பத்த ஆஸந: நாஸிகா அக்ர ந்யஸ்த ஆக்ஷ: பூரக ஆத்யை: ஜித பவந பத: சித்த பத்மம் து அவாஞ்சம் ஊர்த்வ அக்ரம் பாவயித்வா ரவி விது சிகிந: ஸம்விசிந்த்ய உபரிஷ்டாத் தத்ரஸ்தம் பாவயே த்வாம் ஸஜல ஜலதர ச்யாமளம் கோமள அங்கம் ध्यानं ते शीलयेयं समतनुसुखबद्धासनो नासिकाग्र - न्यस्ताक्षः पूरकाद्यैर्जितपवनपथश्चित्तपद्मं त्ववाञ्चम् । ऊर्ध्वाग्रं भावयित्वा रविविधुशिखिनः संविचिन्त्योपरिष्टात् तत्रस्थं भावये त्वां सजलजलधरश्यामलं कोमळाङ्गम्

குருவாயூரப்பா! நான் உனது த்யான நிலையை அறியவேண்டும். அதற்கு உடலை நேராக வைத்து, பத்மாஸனத்தில் அமர்ந்து, பார்வையை இரு புருவங்களின் மத்தியில் நிலை நிறுத்துவேன். பூரகம் மூலமாக ப்ராண வாயு வழியை வென்று விடுவேன். கீழ் நோக்கி உள்ள இதயத்தாமரை மேல் நோக்கி உள்ளதாகக் கண்டு, அதன் மேல் சூரிய மண்டலம், சந்த்ர மண்டலம், அக்னி மண்டலம் உள்ளதாகக் கொள்வேன். அந்த அக்னி மண்டலத்தின் நடுவில், நீர் கொண்ட நீலமேகம் போன்று அழகிய மென்மையான உனது திருமேனியைத் தியானம் செய்வேன்.