Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 978)

Dasaka 95 - தியான யோகம்

சித்தார்த்ரீபாவமுச்சைர் வபுஷி ச புலகம் ஹர்ஷபாஷ்பம் ஹித்வா சித்தம் சுத்தயேத்கதம் வா கிமு பஹு தபஸா வித்யயா வீதபக்தே: த்வத் காதாஸ்வாத ஸித்தாஞ்ஜந ஸதத மரீம்ருஜ்யமாநோSயமாத்மா சக்ஷுர்வத் தத்வ ஸூக்ஷ்மம் பஜதி ந து ததாSப்யஸ்தயா தர்க்ககோட்யா சித்த ஆர்த்ரீ பாவம் உச்சை: வபுஷி ச புலகம் ஹர்ஷ பாஷ்பம் ஹித்வா சித்தம் சுத்தயேத் கதம் வா கிமு பஹு தபஸா வித்யயா வீத பக்தே: த்வத் காதா ஆஸ்வாத ஸித்த அஞ்ஜந ஸதத மரீம்ருஜ்யமாந: அயம் ஆத்மா சக்ஷு: வத் தத்வ ஸூக்ஷ்மம் பஜதி ந து ததா அப்யஸ்தயா தர்க்ககோட்யா चित्तार्द्रीभाववमुच्चैर्वपुषि च पुलकं हर्षबाष्पञ्च हित्वा चित्तं शुद्धयेत्कथं वा किमु बहुतपसा विद्यया वीतभक्तेः । त्वद्गाथास्वादसिद्धाञ्जनसततमरीमृज्यमानोऽयमात्मा चक्षुर्वत् तत्त्वसूक्ष्मं भजति न तु तथाभ्यस्तया तर्ककोट्या

குருவாயூரப்பா! மனமானது எப்போதும் தூய்மையுடனும் ஆனந்தத்துடனும் இருத்தல், (உன்னைப் பற்றிக் கூறும்போது) உடல் சிலிர்த்தல், ஆனந்தக்கண்ணீர் பெருகுதல் ஆகியவை இல்லையென்றால், மனத்தூய்மை எப்படிக் கிடைக்கும்? பக்தி என்பது இல்லை என்றால் தவமும், ஞானமும் இருந்து என்ன பயன் உள்ளது? ஸித்தியின் மூலம் கிடைத்த மையைக் கண்களில் பூசுவதால் தீர்க்கமான பார்வையைக் கண் பெறுகிறது. அது போன்று உனது சரிதங்களைக் கேட்டு கேட்டு மனம் (ஆத்மா) தூய்மை பெற்று, உண்மையான ஞானம் அடைகிறது. அந்த ஞானமானது மிகுந்த நுண்ணிய பயிற்சிகள் மூலம் கிட்டுவதில்லை.