Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 977)
Dasaka 95 - தியான யோகம்
த்வத் பக்தோ பாத்யமாநோSபி ச விஷய ரஸைரிந்த்ரியாசாந்தி ஹேதோ: பக்த்யைவாக்ரம்யமாணை: புநரபி கலு தைர்துர்பலைர்நாபிஜய்ய: ஸப்தார்ச்சிர் தீபிதார்ச்சிர் தஹதி கில யதா பூரி தாரு ப்ரபஞ்சம் த்வத் பக்த்யோகே ததைவ ப்ரதஹதி துரிதம் துர்மத: க்வேந்த்ரியாணாம் த்வத் பக்த: பாத்யமாந: அபி ச விஷய ரஸை: இந்த்ரிய அசாந்தி ஹேதோ: பக்த்யா ஏவ ஆக்ரம்யமாணை: புந: அபி கலு தை: துர்பலை: ந அபிஜய்ய: ஸப்தார்ச்சி: தீபிதார்ச்சி: தஹதி கில யதா பூரி தாரு ப்ரபஞ்சம் த்வத் பக்தி ஓகே ததா ஏவ ப்ரதஹதி துரிதம் துர்மத: க்வ இந்த்ரியாணாம் त्वद्भक्तो बाध्यमानोऽपि च विषयरसैरिन्द्रियाशान्तिहेतो - र्भक्त्यैवाक्रम्यमाणैः पुनरपि खलु तैर्दुर्बलैर्नाभिजय्यः । सप्तार्चिर्दीपितार्चिर्दहति किल यथा भूरिदारुप्रपञ्चं त्वद्भक्त्योघे तथैव प्रदहति दुरितं दुर्मदः क्वेन्द्रियाणाम्
குருவாயூரப்பா! உன்னுடைய பக்தன் தனது இந்த்ரியங்கள் வசப்படாமல் உள்ளதால், சிற்றின்பங்கள் நுகர்ந்து துன்பம் அடைகிறான். ஆயினும் ஒரு நிலையில் பக்தியின் வேகத்தால் இந்திரியங்கள் வெல்லப்பட்டு, மீண்டும் அந்த சிற்றின்பங்கள் அவனை நெருங்குவதில்லை. எளிதாக எரிகின்ற அக்னியானது எவ்விதம் விறகுகளைத் தன் வசம் இழுத்து எரிக்கின்றதோ, அதுபோன்று உன்னிடம் வைத்த பக்தியானது பாபங்கள் அனைத்தையுமே அழிக்கிறது. அதன் பின்னர் இந்த்ரியங்களுடைய ஆதிக்கம் எப்படி இருக்கமுடியும்?