Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 976)

Dasaka 95 - தியான யோகம்

த்வத் பக்த்யா துஷ்ட புத்தே: ஸுகமிஹ சரதோ விச்யுதாசஸ்ய சாசா: ஸர்வா: ஸ்யு: ஸௌக்யமய்ய: ஸலில குஹரகஸ்யேவ தோயைகமய்ய: ஸோSயம் கல்விந்த்ரலோகம் கமலஜ பவநம் யோகஸித்தீச்ச ஹ்ருத்யா: நாகாங்க்ஷத்யேததாஸ்தாம் ஸ்வயமநுபதிதே மோக்ஷ ஸௌக்யேSப்யநீஹ: த்வத் பக்த்யா துஷ்ட புத்தே: ஸுகம் இஹ சரத: விச்யுத ஆசஸ்ய ச ஆசா: ஸர்வா: ஸ்யு: ஸௌக்யமய்ய: ஸலில குஹரகஸ்ய இவ தோய ஏகமய்ய: ஸ: அயம் கலு இந்த்ரலோகம் கமலஜ பவநம் யோக ஸித்தீ: ச ஹ்ருத்யா: ந ஆகாங்க்ஷதி ஏதத் ஆஸ்தாம் ஸ்வயம் அநுபதிதே மோக்ஷ ஸௌக்யே அபி அநீஹ: त्वद्भक्त्या तुष्टबुद्धेः सुखमिह चरतो विच्युताशस्य चाशाः सर्वास्स्युः सौख्यमय्यः सलिलकुहरगस्येव तोयैकमय्यः । सोऽयं खल्विन्द्रलोकं कमलजभवनं योगसिद्धीश्च हृद्या नाकाङ्क्षत्येतदास्तां स्वयमनुपतिते मोक्षसौख्येऽप्यनीहः

குருவாயூரப்பா! உன்னிடம் மாறாத ஆழ்ந்த பக்தி உடையவன் எந்தவிதமான பற்றும் இல்லாமல் மிகுந்த மிகழ்வுடன் உள்ளான். நீரின் நடுவே உள்ளவனுக்குப் பார்க்கும் இடம் அனைத்தும் நீராக உள்ளது போன்று, உனது பக்தி உடையவனுக்கு அனைத்து திசைகளும் இன்பம் அளிக்கின்றன. அப்படிப்பட்டவன் இந்த்ரனின் ஸ்வர்க்கத்தையோ, நான்முகனின் ஸத்யலோகத்தையோ, யோகிகள் விரும்பும் யோக ஸித்திகளையோ நாடுவதில்லை. மோக்ஷம் தானாகவே கிடைத்தாலும் அதனைக் கூட ஏற்பதில்லை.