Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 975)
Dasaka 95 - தியான யோகம்
ஸந்தி ச்ரேயாம்ஸி பூயாம்ஸ்யபி ருசிபிதயா கர்மிணாம் நிர்மிதாநி க்ஷுத்ராநந்தாச்ச ஸாந்தா பஹுவித கதய: க்ருஷ்ண தேப்ய: பவேயு: த்வம் சாசக்யாத ஸக்யே நநு மஹிததமாம் ச்ரேயஸாம் பக்திமேகாம் த்வத் பக்த்யாநந்த துல்ய: கலு விஷய ஜுஷாம் ஸம்மத: கேந வா ஸ்யாத் ஸந்தி ச்ரேயாம்ஸி பூயாம்ஸி அபி ருசி பிதயா கர்மிணாம் நிர்மிதாநி க்ஷுத்ர ஆநந்தா: ச ஸாந்தா பஹு வித கதய: க்ருஷ்ண தேப்ய: பவேயு: த்வம் ச ஆசக்யாத ஸக்யே நநு மஹிததமாம் ச்ரேயஸாம் பக்திம் ஏகாம் த்வத் பக்தி ஆநந்த துல்ய: கலு விஷய ஜுஷாம் ஸம்மத: கேந வா ஸ்யாத் सन्ति श्रेयांसि भूयांस्यपि रुचिभिदया कर्मिणां निर्मितानि क्षुद्रानन्दाश्च सान्ता बहुविधगतयः कृष्ण तेभ्यो भवेयुः । त्वञ्चाचख्याथ सख्ये ननु महिततमां श्रेयसां भक्तिमेकां त्वद्भक्त्यानन्दतुल्यः खलु विषयजुषां सम्मदः केन वा स्यात्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கர்மங்களைக் (கடமைகளை) செய்வதற்கு, அவற்றைச் செய்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நன்மைகள் பெறுவதற்கு, பல வழிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அவை மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் அனைத்துமே குறைந்த இன்பம் தருவதாகவும், நிலையற்ற பல பதவிகளை அளிப்பதாகவும், முடிவுள்ளவையாகவும் உள்ளன. நீ உனது உற்ற நண்பனான உத்தவரிடம், “மற்ற அனைத்து வழிகளைக் காட்டிலும், சிறந்த நன்மை பெற என்னிடம் பக்தி கொள்வதே சிறந்தது”, என்றாய். அற்பமான விஷயங்களில் சுகம் காணும் மனிதர்களுக்கு உனது பக்தி மூலம் கிடைக்கும் பேரானந்தத்திற்கு ஈடாக எதுதான் கிடைக்கும்?