Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 974)
Dasaka 95 - தியான யோகம்
ஸத்வோந்மேஷாத் கதாசித் கலு விஷய ரஸே தோஷ போதேSபி பூமந் ! பூயோSப்யேஷு ப்ரவ்ருத்திஸ்ஸதமஸி ரஜஸி ப்ரோத்ததே துர்நிவாரா சித்தம் தாவத் குணாச்ச க்ரதிதமிஹ மிதஸ்தாநி ஸர்வாணி ரோத்தும் துர்யே த்வய்யேக பக்திச்சரணமிதி பவாந் ஹம்ஸரூபி ந்யாகாதீத் ஸத்வ உந்மேஷாத் கதாசித் கலு விஷய ரஸே தோஷ போதே அபி பூமந் பூய: அபி ஏஷு ப்ரவ்ருத்தி: ஸதமஸி ரஜஸி ப்ரோத்ததே துர்நிவாரா சித்தம் தாவத் குணா: ச க்ரதிதம் இஹ மித: தாநி ஸர்வாணி ரோத்தும் துர்யே த்வயி ஏக பக்தி: சரணம் இதி பவாந் ஹம்ஸரூபி ந்யாகாதீத் सत्त्वोन्मेषात् कदाचित् खलु विषयरसे दोषबोधेऽपि भूमन् भूयोऽप्येषु प्रवृत्तिः सतमसि रजसि प्रोद्धते दुर्निवारा । चित्तं तावद्गुणाश्च ग्रथितमिह मिथस्तानि सर्वाणि रोद्धुं तुर्ये त्वय्येकभक्तिः शरणमिति भवान् हंसरूपी न्यगादीत्
குருவாயூரப்பா! எங்கும் நிறைந்துள்ளவனே! ஸத்வகுணம் சில சமயங்களில் அதிகமாவதால், சிற்றின்ப உலக விவரங்களில் குறைகள் உண்டு என்ற அறிய முடிகிறது. இருந்தாலும் மீண்டும் ரஜோ குணமும் தாமஸ குணமும் தலை தூக்குவதால் மீண்டும் அந்த விவரங்களில் நாட்டம் அதிகரிக்கின்றது. அதனைத் தடுக்க இயலவில்லை. அந்த நேரத்தில் மனமும், விவரங்களும், குணங்களும் கலந்துவிடுகின்றன. மூன்று குணங்களையும் அடக்குவதற்கான நான்காவது மார்க்கமான ஏகாந்த பக்தியை பின்பற்றுமாறும், அதுவே உன்னை அடைய கதி என்றும் நீ அன்னப்பறவையாக வந்து ஸநகர் முதலியவர்களிடம் கூறினாயாமே!