Sriman Narayaneeyam - Dasaka 95 - தியான யோகம் (ச்லோகம் 973)

Dasaka 95 - தியான யோகம்

ஆதௌ ஹைரண்யகர்பீம் தநுமவிகல ஜீவாத்மிகாமாஸ்திதஸ்த்வம் ஜீவத்வம் ப்ராப்ய மாயா குண கண கசிதோ வர்த்தஸே விச்வயோநே ! தத்ரோத்வ்ருத்தேந ஸத்வேந து குண யுகளம் பக்திபாவம் கதேந சித்வா ஸத்வம் ச ஹித்வா புநரநுபஹிதோ வர்த்திதாஹே த்வமேவ ஆதௌ ஹைரண்யகர்பீம் தநும் அவிகல ஜீவாத்மிகாம் ஆஸ்தித: த்வம் ஜீவத்வம் ப்ராப்ய மாயா குண கண கசித: வர்த்தஸே விச்வயோநே ! தத்ர உத்வ்ருத்தேந ஸத்வேந து குண யுகளம் பக்திபாவாம் கதேந சித்வா ஸத்வம் ச ஹித்வா புந: அநுபஹித: வர்த்திதாஹே த்வம் ஏவ आदौ हैरण्यगर्भीं तनुमविकलजीवात्मिकामास्थितस्त्वं जीवत्वं प्राप्य मायागुणगणखचितो वर्तसे विश्वयोने । तत्रोद्वृद्धेन सत्त्वेन तु गणयुगळं भक्तिभावं गतेन - छित्वा सत्त्वं च हित्वा पुनरनुपहितो वर्तिताहे त्वमेव

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஜகத்தின் காரணப்பொருளே! ப்ரளயத்தின் பின்னர் உலகைப் படைக்க எண்ணியபோது, அனைத்து ஜீவன்களின் வடிவமான ஹிரண்யகர்ப்ப உடலை எடுத்தாய். பின்னர் தனியான ஜீவன்களின் உருவமாக மாறினாய். அதன் பின்னர் மாயையின் கூட்டத்துடன் கலந்தாய் (மாயையின் கூட்டம் என்பது - மஹத், அகங்காரம், பஞ்ச பூதங்கள், கர்ம இந்த்ரியங்கள், ஞான இந்த்ரியங்கள், ப்ராணன்கள் ஆகும்). உனது அந்த உருவில் ஒரு ஜீவனாகிய நான், பக்தி வளர்ச்சியடைந்து, ஸத்வ குணம் மேலோங்கி நின்று, அதனால் ரஜோ மற்றும் தாமஸ குணங்களை அழிப்பேன். பின்னர் ஸத்வ குணத்தையும் விட்டு, குணங்களால் மறைக்கப்படாத உனது ஸ்வரூபமாக நான் மாறுவேன் (ஒன்றி விடுவேன்).