Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 972)
Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி
ஐக்யம் தே தாந ஹோம வ்ரத நியம தபஸ்ஸாங்க்ய யோகைர் துராபம் த்வத் ஸங்கேநைவ கோப்ய: கில ஸுக்ருதிதமா ப்ராபுராநந்த ஸாந்த்ராம் பக்தேஷ்வநயேஷு பூயஸ்ஸ்வபி பஹுமநுஷே பக்திமேவ த்வமாஸாம் தந்மே த்வத் பக்திமேவ த்ரடய ஹர கதாந் க்ருஷ்ணா வாதாலயேச ஐக்யம் தே தாந ஹோம வ்ரத நியம தப: ஸாங்க்ய யோகை: துராபம் த்வத் ஸங்கேந ஏவ கோப்ய: கில ஸுக்ருதிதமா: ப்ராபு: ஆநந்த ஸாந்த்ராம் பக்தேஷு அநயேஷு பூய: ஸு அபி பஹு மநுஷே பக்திம் ஏவ த்வம் ஆஸாம் தத் மே த்வத் பக்திம் ஏவ த்ரடய ஹர கதாந் க்ருஷ்ணா வாதாலய ஈச ऐक्यं ते दानोहोमव्रतनियमतपः साङ्ख्ययोगैर्दुरापं त्वत्सङ्गेनैव गोप्यः किल सुकृतितमाः प्रापुरानन्दसान्द्रम् । भक्तेष्वन्येषु भूयस्स्वपि बहुमनुषे भक्तिमेव त्वमासां तन्मे त्वद्भक्तिमेव दृढय हर गदान् कृष्ण वातालयेश
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடன் ஒன்றாவதான மோக்ஷமானது தானம், ஹோமம், வ்ரதம், கர்மாக்கள், தவம், ஞானம், யோகம் போன்றவற்றின் மூலம் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆயினும் அதனைக் கோபிகைகள் (மிகவும் எளிதாகப்) பெற்றனர். உனது சேர்க்கையின் மூலமே அவர்கள் மோக்ஷம் பெற்றனர். உனக்குப் பல பக்தர்கள் இருந்தாலும், நீ அந்தக் கோபிகைகளையே உயர்வாகவும், அவர்கள் பக்தியையே சிறந்ததாகவும் கொண்டாய் அல்லவா? எனவே அவர்கள் போன்ற பக்தி எனக்குத் திடமாக இருத்தல் வேண்டும்; அதனை நீயே அளிப்பாயாக. குருவாயூரின் ஈசனே! எனது பிணிகளை நீக்கவேண்டும்.***