Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 971)
Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி
யத்யல்லப்யேத தத்தத் தவ ஸமுபஹ்ருதம் தேவ தாஸோSஸ்மி தேSஹம் த்வத் கேஹோந்மார்ஜநாத்யம் பவது மம முஹு: கர்ம நிர்மாயமேவ ஸூர்யாக்நி ப்ராஹ்மணாத்மாதிஷு லஸித சதுர்பாஹுமாராதயே த்வாம் த்வத் ப்ரேமார்த்ரத்வரூபோ மம ஸததம் அபிஷ்யந்ததாம் பக்தியோக: யத் யத் லப்யேத தத் தத் தவ ஸமுபஹ்ருதம் தேவ தாஸ: அஸ்மி தே அஹம் த்வத் கேஹ உந்மார்ஜந ஆத்யம் பவது மம முஹு: கர்ம நிர்மாயம் ஏவ ஸூர்ய அக்நி ப்ராஹ்மண ஆத்ம ஆதிஷு லஸித சதுர்பாஹும் ஆராதயே த்வாம் த்வத் ப்ரேம ஆர்த்ரத்வ ரூப: மம ஸததம் அபிஷ்யந்ததாம் பக்தியோக: यद्यल्लभ्येत तत्तत्तव समुपहृतं देव दासोऽस्मि तेऽहं त्वद्गेहोन्मार्जनाद्यं भवतु मम मुहुः कर्म निर्मायमेव । सूर्याग्निब्राह्मणात्मादिषु लसितचतुर्बाहुमाराधये त्वां त्वत्प्रेमार्द्रत्वरूपो मम सततमभिष्यन्दतां भक्तियोगः
குருவாயூரப்பா! எனக்குக் கிடைக்கும் எந்தப் பொருளையும் நான் உன்னிடமே அர்ப்பணம் என்று தந்து விடுவேனாக. நான் என்றும் உனது அடிமையாகவே உள்ளேன். உனது திருக்கோயிலைச் சுத்தம் செய்வது போன்ற தூய பணிகள் எனக்கு உண்டாக வேண்டும். மேலும் சூரியன், அக்னி, அந்தணன் மற்றும் ஆத்மா ஆகியவற்றில் நான்கு திருக்கரங்களுடன் கூடிய உனது திருமேனியைக் கண்டு வணங்குவேன். உன் மீது நான் கொண்டுள்ள அன்பு மழையால், எனது உள்ளம் மிகவும் நெகிழ்ந்து, பக்தியோகம் மேலும் தழைக்க வேண்டும்.