Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 970)

Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி

யோ யாவாந் யாத்ருசோ வா த்வமிதி கிமபி நைவாவகச்சாமி பூமந் ! ஏவஞ்சாநந்ய பாவஸ்த்வதநுபஜநம் ஏவாத்ரியே சைத்ய வைரிந் ! த்வல்லிங்காநாம் த்வதங்க்ரி ப்ரியஜந ஸதஸாம் தர்சந ஸ்பர்சநாதி: பூயாந்மே த்வத் ப்ரபூஜா நதி நுதி குண கர்மாநுகீர்த்யாதரோSபி ய: யாவாந் யாத்ருச: வா த்வம் இதி கிம் அபி ந ஏவ அவகச்சாமி பூமந் ! ஏவம் ச அநந்ய பாவ: த்வத் அநுபஜநம் ஏவ ஆத்ரியே சைத்ய வைரிந் ! த்வத் லிங்காநாம் த்வத் அங்க்ரி ப்ரிய ஜந ஸதஸாம் தர்சந ஸ்பர்சந ஆதி: பூயாத் மே த்வத் ப்ரபூஜா நதி நுதி குண கர்ம அநுகீர்த்தி ஆதர: அபி यो यावान्यादृशो वा त्वमिति किमपि नैवावगच्छामि भूमन्नेवञ्चानन्यभावः त्वदनुभजनमेवाद्रिये चैद्यवैरिन् । त्वल्लिङ्गानां त्वदङ्घ्रिप्रियजनसदसां दर्शनस्पर्शनादि- र्भूयान्मे त्वत्प्रपूजानतिनुतिगुणकर्मानुकीर्त्यादरोऽपि

குருவாயூரப்பா! எங்கும் நிறைந்தவனே! சிசுபாலனின் விரோதியே! க்ருஷ்ணா! நீ எப்படிப்பட்ட ஸ்வரூபம் உடையவன், உனது பெருமைகள் மற்றும் மஹிமைகள் என்ன, உனது நெறிமுறைகள் என்ன, இப்படியாக எதனையும் நான் அறியவில்லை. இருப்பினும் வேறு எங்கும் மனதைச் செலுத்தாமல் உன்னையே த்யானிக்கிறேன். அதனை மட்டுமே விரும்புகிறேன். உனது விக்ரகங்களிலும், திருவடிகளிலும் பக்தி செலுத்தும் அடியார்களைக் கண்டவுடன் அவர்களை வணங்குவது, அவர்களுடன் சேர்வது ஆகியவை எனக்குக் கைகூட வேண்டும், மேலும், உன்னை எப்போதும் வணங்குவது, பூஜை செய்வது, துதிப்பது, திருக்கல்யாண குணங்களைக் கூறுவது ஆகியவற்றை நீ எனக்கு உண்டாக்க வேண்டும்.