Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 969)

Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி

சப்த ப்ரஹ்மண்யபீஹ ப்ரயதித மநஸஸ்த்வாம் ந ஜாநந்தி கேசித் கஷ்டம் வந்த்யச்ரமாஸ்தே சிரதரமிஹ காம் பிப்ரதே நிஷ்ப்ரஸூதிம் யஸ்யாம் விச்வாபிராமாஸ்ஸகல மலஹரா திவ்ய லீலாவதாரா: ஸச்சித்ஸாந்த்ரம் ச ரூபம் தவ ந நிகதிதம் தாம் ந வாசம் ப்ரியாஸம் சப்த ப்ரஹ்மணி அபி இஹ ப்ரயதித மநஸ: த்வாம் ந ஜாநந்தி கேசித் கஷ்டம் வந்த்ய ச்ரமா: தே சிரதரம் இஹ காம் பிப்ரதே நிஷ்ப்ரஸூதிம் யஸ்யாம் விச்வ அபிராமா: ஸகல மல ஹரா திவ்ய லீலா அவதாரா: ஸத் சித் ஸாந்த்ரம் ச ரூபம் தவ ந நிகதிதம் தாம் ந வாசம் ப்ரியாஸம் शब्दब्रह्मण्यपीह प्रयतितमनसस्त्वां न जानन्ति केचित् कष्टं वन्ध्यश्रमास्ते चिरतरमिह गां बिभ्रते निष्प्रसूतिम् यस्यां विश्वाभिरामा: सकलमलाहरा दिव्यलीलावताराः सच्चित्सान्द्रं च रूपं तव न निगदितं तां न वाचं भ्रियासम्

குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள சிலர், வேதங்களைப் பெரிதும் முயன்று, முழு மனதுடன் கற்று, அந்த வேதங்களில் மனதைச் செலுத்தியவர்களாக உள்ளனர். இருந்தாலும் அவர்கள் உன்னை அறிவதில்லை. அவர்கள் இப்படியாக மிகவும் சிரமத்துடன் வேதங்களைச் சுமக்கின்றனர். இது, கன்று ஈன இயலாத மலட்டுப் பசுவைப் போல பராமரிப்பது போன்று அல்லவோ உள்ளது? அனைவரது மனதையும் சுலபமாகக் கவர்ந்து இழுப்பதும், பாபங்களை நீக்கவல்லதும், உனது லீலைகளை மிகவும் தெளிவாக விளக்குவதும், உனது அவதாரச் சரிதங்களைக் கூறுவதும், ஸச்சிதானந்த மயமாக உள்ளதும் ஆகிய உனது உயர்ந்த திருமேனியைப் பற்றி வர்ணிக்காத எந்த ஒரு வார்த்தையையும் நான் கற்கக்கூடாது. இப்படியாக நீ எனக்கு அருள்வாயாக.