Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 968)

Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி

ஜீவந்முக்தத்வமேவம் விதமிதி வசஸா கிம் பலம் தூரதூரே தந்நாமாசுத்தபுத்தேர்ந லகு மநஸச் சோதநம் பக்திதோSந்யத் தந்மே விஷ்ணோ க்ருஷீஷ்டாஸ்த்வயி க்ருத ஸகல ப்ரார்பணம் பக்திபாரம் யேந ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித் குரு வசந மிலத் த்வத் ப்ரபோதஸ்த்வதாத்மா ஜீவந் முக்தத்வம் ஏவம் விதம் இதி வசஸா கிம் பலம் தூர தூரே தத் நாம அசுத்த புத்தே: ந லகு மநஸ: சோதநம் பக்தித: அந்யத் தத் மே விஷ்ணோ க்ருஷீஷ்டா: த்வயி க்ருத ஸகல ப்ரார்பணம் பக்திபாரம் யேந ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித் குரு வசந மிலத் த்வத் ப்ரபோத: த்வத் ஆத்மா जीवन्मुक्तत्वमेवंविधमिति वचसा किं फलं दूरदूरे तन्नामाशुद्धबुद्धेर्न च लघु मनसः शोधनं भक्तितोऽन्यत् । तन्मे विष्णो कृषीष्ठास्त्वयि कृतसकलप्रार्पणं भक्तिभारं येन स्यां मङ्क्षु किञ्चिद्गुरुवचनमिलत् त्वत्प्रबोधस्त्वदात्मा

குருவாயூரப்பா! விஷ்ணுவே! உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது (தனது பற்றற்ற தன்மையால்) விடுதலை பெற்ற (ஜீவமுக்தன்) மனிதனின் நிலை இப்படியானது என்று கூறுவதால் என்ன நன்மை உள்ளது? மனதில் சிறிதும் தூய்மை என்பதே இல்லாதவர்களுக்கு இந்த ஜீவமுக்த நிலை என்பது வெகுதூரத்தில் அல்லவா உள்ளது? ஆயினும் அந்த மனதைச் சுத்தம் செய்வதற்கு உனது பக்தியை விடச் சிறந்த வழி என்று வேறு எதுவும் கிடையாது. எனவே உன்னிடம் அனைத்தையும் அர்ப்பணம் செய்யும் பக்தியை எனக்கு நீ அளிப்பாயாக! அந்த பக்தியையும், குரு செய்யும் சிறு உபதேசங்களையும் கொண்டு நான் ப்ரஹ்மத்தைக் குறித்த ஞானம் ஏற்பட்டவனாக, விரைவில் ப்ரஹ்மமாகவும் ஆகிவிடுவேன் (உயிர் பிரிந்த நிலையில் ஆத்மா ப்ரஹ்மத்துடன் கலந்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பெறுகிறது என்று ப்ரஹ்மஸூத்ரம் கூறுகிறது. இவர் அதனைக் கூறுகிறார்).